அசோகர் கிர்நார் (குஜராத்) கல்வெட்டு பொமு.250 இதில் உள்ள சோடா,பாடா, கேதளபுதோ ஸதியபுதோ என்பவை முறையே சோழர், பாண்டியர், சேரர் மற்றும் அதியமான் ஆக இருக்கலாம் என அறிஞர் கருத்து.
அசோகரின் இரண்டாவது கல்வெட்டு கூறும் தமிழக அரசர்கள்
அசோகர் கிர்நார் (குஜராத்) கல்வெட்டு பொமு.250 இதில் உள்ள சோடா,பாடா, கேதளபுதோ ஸதியபுதோ என்பவை முறையே சோழர், பாண்டியர், சேரர் மற்றும் அதியமான் ஆக இருக்கலாம் என அறிஞர் கருத்து.
அசோகரின் இரண்டாவது கல்வெட்டு கூறும் தமிழக அரசர்கள்
ஒடிசாவின் கலிங்க அரசன் காரவேலன் வடமொழி கல்வெட்டு கூறும் தாமிர கூட்டணி.
ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.
பல்லவர்கள் காஞ்சி கடிகை பல்கலைக்கழகம் கூறும் 5ம் நூற்றாண்டு கன்னட தாளகுண்டா கல்வெட்டு
கர்நாடகத்தில் ஷிமோகா அருகில் உள்ள தாளகுண்டா சிவன் கோவில் தூணில் உள்ள கன்னட கல்வெட்டு பொஆ.5ம் நூற்றாண்டு பிற்பகுதியை சேர்ந்தது.
https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/
தலகுண்டா கல்வெட்டில் காஞ்சிக் கடிகை
அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப் பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப் பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், தலகுண்டா கிராமத்தில் உள்ள பிரணவேஸ்வரா கோவில் வளாகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த மன்னனின் கல்வெட்டிற்கு தலகுண்டா தூண் கல்வெட்டு என்று பெயர். இந்தக் கல்வெட்டே கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது. (பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று பி.எல்.ரைஸ் கால அளவீடு செய்துள்ளார். இக்கல்வெட்டு காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.
“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக் ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”
மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வீரசர்மனுடன், பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்) நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று விட்டான் என்று பதிவு செய்துள்ளது.
தலகுண்டா தூண் கல்வெட்டு
மயூரசர்மனும் அவனுடைய ஆசிரியர் வீரசர்மனும் வேத சாஸ்திரங்களில் புலமை உடையவர்கள். என்றாலும் காஞ்சிக் கடிகையில் இடம் பெற்றிருந்த சதுர்வேத பண்டிதர்களிடம் கற்ற பிறகே ஒருவரின் வேத சாஸ்திரக் கல்வி முழுமை பெற்றதாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. மயூரசர்மன் யாசகனாக (தர்க்குகஹ), அஃதாவது அறிவினை யாசிப்பதற்காகக், காஞ்சிக் கடிகைக்குச் சென்றான். தன்னுடன் தன்னுடைய ஆசிரியனான வீரசர்மனுடன் சென்றான். வேதம் முழுவதையும் பிரவசனம் (Expound) செய்து கற்றுக்கொள்ளும் நோக்கில் இவர்கள் காஞ்சிக் கடிகைக்குச் சென்றுள்ளனர். பிரவசனம் என்றால் மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றல் என்று பொருள் கொள்ளலாம். இந்த நிகழ்வு கி.பி. 4 ஆம் நூற்றண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லவமல்லனாகிய இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு காஞ்சி கடிகையைப் பற்றியும் இக்கடிகையில் அந்தணர்களுக்கு நான்கு வேதங்கள் கற்பிக்கப்பட்ட செய்தியையும் பதிவு செய்துள்ளது. எனவே காஞ்சிக் கடிகையில் வேத ஆராய்ச்சிக் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது தெளிவு.
காஞ்சிக் கடிகைக்குப் பல்லவர்கள் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள், பேணிக் காத்தார்கள். கடிகையார்களும் பல்லவ மன்னனுக்காக அஸ்வமேத யாகம் நடத்தினர். ஒரு சமயம் மயூரசர்மனுக்கும் பல்லவர்களுடைய குதிரைச் சேவகனுக்கும் வாக்குவாதம் முற்றிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டை, சேவகன் அந்தணரை ஏளனமாகப் பேசியதால் மூண்ட சண்டை ஆகும். அந்தணர்கள் சத்திரியர்களால் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று கருதிய மயூரசர்மன் கோபமுற்று தன் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான். பல்லவரின் காவலர்களை வெற்றிகொண்டு காஞ்சியை விட்டகன்று ஸ்ரீபர்வதம் வரை பரவியிருந்த அடர்காட்டில் புகுந்தான்.
தாளகுண்டாவிற்கு வடகிழக்கே 7 கிமீ தொலைவில் உள்ள மாலவல்லியில் கிடைத்த சாதவாஹனர் கால பிராகிருத கல்வெட்டு, கி.பி 1-2 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்த இடம் சாதவாகனர்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததை நிரூபிக்கிறது. இங்கு காணப்படும் புனித ஆதிகால கடவுள் பாவா, சாதகர்ணிகளால் வணங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டில் கூறப்படுகிறது.
https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/
சங்க இலக்கியங்களில் வடநாட்டில் ஆண்ட நந்த அரச குலத்தை பற்றியும் மௌரியர்களை பற்றியும் உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல் மிகத் தெளிவாக உரைக்கின்றது
புகலூர் கல்வெட்டு
கரூர் அருகே புகலூர் எனப்படும் பயன்மையின் ஊரின் அருகில் உள்ள ஆறு நாட்டு மலை என்ற மலையில் கிடைத்த சமண முனிவர்களுக்கு பாறை குகை அமைத்துக் கொடுத்த பொ.ஆ.2ம் நூற்றாண்டு கல்வெட்டு
புகலூர் கல்வெட்டில் உள்ள பெயர்கள் மூன்று சங்க அரசின் சேர அரசர்கள் பெயர் என்பது என இப்பொழுது கருத்து ஒற்றுமை வந்துள்ளது
கோவை செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று திரு.கிருஷ்ணமூர்த்தி படித்த கட்டுரையில் சேரர் காசுகள் ரோமன் அகஸ்டஸ் சீசர்(ஆட்சி பொமு27-பொஆ14) காசுகளை பின்பற்றி உருவானவை, ஒரு காசு ரோமன் அகஸ்டஸ் சீசர் காசின் மேல் மாக்கோதை அச்சு வைக்கப்பட்டதையும் கூறி உள்ளார். அகஸ்டஸ் சீசர் படம் தாங்கிய காசுகள் 4ம் நூற்றாண்டு இறுதி வரை வெளியுட்டுள்ளனர்.
இந்த மூன்று காசுகளுமே ரோமன் அகஸ்டஸ் சீசர் காசை பின்பற்றி; ஒரு பக்கம் ஆட்சியின் சின்னம் அதாவது வில்லும் மறு பக்கம் அரசன் தலை அமைந்துள்ளது எனப் பழங்காசுகள் ஆய்வு பேரறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எனவே இவை பொ.ஆ.2-4ம் நூற்றாண்டு என்பது மிகச்சரியாக பொருந்தும்
சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள்
இக்காசுகளில் உள்ள சேர சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் பட்டியலை நாம் இரு புத்தகங்களில் காண்கிறோம்
திதிகள் பற்றிய புரிதல்...
கிமு கிபி எப்போது வந்தது? எப்போது போனது? அதற்கு முன்பு இருந்த ரோமு ரோபி என்றால் என்ன? காலண்டரின் கதையைத் தெரிந்து கொள்வோம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர் (காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின் பிடிக்குள் வந்து விட்டது.
2) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த காலண்டரே. அ) 12 மாதங்கள் ஆ) 365 நாட்கள் இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய அனைத்து அம்சங்களுமே கிமு 46ல் சீசரால் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.
3) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது, இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது கருதத் தக்கது.
4) அப்படியானால், ஜூலியன் காலண்டரில் ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)
5) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம் உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும் இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை.
ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர். ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால், ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.
6) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில், கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத் தொடங்கியது.
7) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற கணக்கிடும்முறையை அறிமுகம் செய்தார். என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
8.. கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு 400 ஆண்டுக் காலத்திலும் மூன்று லீப் ஆண்டுகளின் பெப்ரவரியின் லீப் நாட்களைக் குறைத்தார்.
9) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர் செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால் பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப் பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம் செய்தவர் என்ற அடிப்படையில் இக்காலண்டர் கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.
10) கிரெகொரிக்குப் பின்னரும் இக்காலண்டரில் தொடர்ந்து தேவையான பல திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 1980களில் கிறிஸ்துவ சகாப்தம் என்ற பெயர் மாற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
11) தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும் அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது.1972 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் விநாடித் திருத்தங்கள் பற்றி (adding leap seconds) அறிந்து கொள்ள வேண்டும்.
.12) ஏசு கிறிஸ்துவின் பெயரில் அமைந்த (கிமு,கிபி)காலண்டருக்கு இஸ்லாமிய சமூகம் பெரிதும் ஆட்சேபம் தெரிவித்து ஏற்க மறுத்தது. தற்போது கிமு, கிபி என்ற சொற்கள் நீக்கப்பட்டதானது இஸ்லாமிய சமூகத்துக்கு நிறைவைத் தந்துள்ளது.
13) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப் பொதுமையை உறுதி செய்கிறது. மதச்சார்பற்ற துல்லியமான நவீனமான அறிவியல் காலண்டரை மானுடம் அடைந்து விட்டது. இது மானுடத்தின் வெற்றி. இது அறிவியலின் வெற்றி.
CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...