பல்லவர்கள் காஞ்சி கடிகை பல்கலைக்கழகம் கூறும் 5ம் நூற்றாண்டு கன்னட தாளகுண்டா கல்வெட்டு
கர்நாடகத்தில் ஷிமோகா அருகில் உள்ள தாளகுண்டா சிவன் கோவில் தூணில் உள்ள கன்னட கல்வெட்டு பொஆ.5ம் நூற்றாண்டு பிற்பகுதியை சேர்ந்தது.
https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/
தலகுண்டா கல்வெட்டில் காஞ்சிக் கடிகை
அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப் பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப் பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், தலகுண்டா கிராமத்தில் உள்ள பிரணவேஸ்வரா கோவில் வளாகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த மன்னனின் கல்வெட்டிற்கு தலகுண்டா தூண் கல்வெட்டு என்று பெயர். இந்தக் கல்வெட்டே கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது. (பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று பி.எல்.ரைஸ் கால அளவீடு செய்துள்ளார். இக்கல்வெட்டு காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.
“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக் ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”
மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வீரசர்மனுடன், பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்) நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று விட்டான் என்று பதிவு செய்துள்ளது.

தலகுண்டா தூண் கல்வெட்டு
மயூரசர்மனும் அவனுடைய ஆசிரியர் வீரசர்மனும் வேத சாஸ்திரங்களில் புலமை உடையவர்கள். என்றாலும் காஞ்சிக் கடிகையில் இடம் பெற்றிருந்த சதுர்வேத பண்டிதர்களிடம் கற்ற பிறகே ஒருவரின் வேத சாஸ்திரக் கல்வி முழுமை பெற்றதாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. மயூரசர்மன் யாசகனாக (தர்க்குகஹ), அஃதாவது அறிவினை யாசிப்பதற்காகக், காஞ்சிக் கடிகைக்குச் சென்றான். தன்னுடன் தன்னுடைய ஆசிரியனான வீரசர்மனுடன் சென்றான். வேதம் முழுவதையும் பிரவசனம் (Expound) செய்து கற்றுக்கொள்ளும் நோக்கில் இவர்கள் காஞ்சிக் கடிகைக்குச் சென்றுள்ளனர். பிரவசனம் என்றால் மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றல் என்று பொருள் கொள்ளலாம். இந்த நிகழ்வு கி.பி. 4 ஆம் நூற்றண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லவமல்லனாகிய இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு காஞ்சி கடிகையைப் பற்றியும் இக்கடிகையில் அந்தணர்களுக்கு நான்கு வேதங்கள் கற்பிக்கப்பட்ட செய்தியையும் பதிவு செய்துள்ளது. எனவே காஞ்சிக் கடிகையில் வேத ஆராய்ச்சிக் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது தெளிவு.
காஞ்சிக் கடிகைக்குப் பல்லவர்கள் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள், பேணிக் காத்தார்கள். கடிகையார்களும் பல்லவ மன்னனுக்காக அஸ்வமேத யாகம் நடத்தினர். ஒரு சமயம் மயூரசர்மனுக்கும் பல்லவர்களுடைய குதிரைச் சேவகனுக்கும் வாக்குவாதம் முற்றிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டை, சேவகன் அந்தணரை ஏளனமாகப் பேசியதால் மூண்ட சண்டை ஆகும். அந்தணர்கள் சத்திரியர்களால் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று கருதிய மயூரசர்மன் கோபமுற்று தன் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான். பல்லவரின் காவலர்களை வெற்றிகொண்டு காஞ்சியை விட்டகன்று ஸ்ரீபர்வதம் வரை பரவியிருந்த அடர்காட்டில் புகுந்தான்.
தாளகுண்டாவிற்கு வடகிழக்கே 7 கிமீ தொலைவில் உள்ள மாலவல்லியில் கிடைத்த சாதவாஹனர் கால பிராகிருத கல்வெட்டு, கி.பி 1-2 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்த இடம் சாதவாகனர்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததை நிரூபிக்கிறது. இங்கு காணப்படும் புனித ஆதிகால கடவுள் பாவா, சாதகர்ணிகளால் வணங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டில் கூறப்படுகிறது.
https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/
No comments:
Post a Comment