Tuesday, August 27, 2024

சேரமான் பெருமாள் கட்டிய மசூதி புனைவு கதை.

  

சேரமான் இஸ்லாத்தை தழுவியதாக கூறுவது ஒரு இஸ்லாமிய புரட்டே !!!

கேரளாவில் இருக்கும் கொடுங்கலூரில் இருக்கும் சேரமான் ஜுமா மஸ்ஜிட் தான் இந்தியாவிலே மிகவும் பழமைவாய்ந்த மசூதியாம்…கிபி 629 இல், மலிக் பின் டினாரால் கட்டபட்டதாக கருதப்படுகிறது…இனி,இந்த மசூதியை சூழ்ந்திருக்கும் வரலாற்று செய்தியை பார்ப்போம்.இந்த வரலாற்று செய்தி எதோ சரித்திர புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள்.இந்த கதை “பொய்மை புகழ்” இஸ்லாமியர்கள் சொன்ன கதை. சரி,கதையென்ன என்பதை பார்ப்போம்.கொடுங்கலூரை ஆட்சி செய்த  சேரமான்   பெருமாள் என்ற    சேர மன்னன்,மக்கா சென்று,இஸ்லாத்தை தழுவி,தாஜுடீன் என்ற முகமதிய   பெயரை பெற்றானம்.ஜடா வை(jeddah)  ஆண்டுக்கொண்டிருந்த ராஜாவின் சகோதரியை மணந்தானாம். பாரதத்துக்கு திரும்பும் போது,மலிக் இப்னு டினார் தலைமை தாங்கிய ஒரு இஸ்லாமி    போதகர் கூட்டத்தை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தானாம்.வரும் வழியில்.நோய்வாய் பட்டு, இறந்தானாம்.ஆனால் இறக்கும் முன்பு,கொடுங்கலூரை அடையும் பாதையை ஒரு கடிதத்தில் எழுதி அவர்களுக்கு கொடுத்தானாம்.அந்த கூட்டம், கொடுங்கலூரை அடைந்து,அக்கடிதத்தை அங்குள்ள ராஜாவுக்கு கொடுத்தார்களாம்.அந்த ராஜாவும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து,நன்கு கவனித்து,அவர்களின் சமயத்தை அங்கு பரப்ப அனுமதி கொடுத்தானாம்.பல சிற்பிகளை கூப்பிட்டு அங்குள்ள அரத்தாளி கோவிலை இடித்து,ஒரு மசூதியை கட்ட கட்டளையிட்டானாம்.அந்த மசூதிதான் சேரமான் பெருமாள் ஜுமா மஸ்ஜிடாம்.

முஸ்லிம்கள் சொல்லும் இந்த ‘வரலாறு’ ,கேரலோல்பதி எனும் கேரளத்தின் பூவிகத்தை விவரிக்கும் நூலில் காணப்படுகிறது.இந்த நூலில் ஏகப்பட்ட இடைசெருகல்கள் உள்ளன…ஆகையினால் இதை ஒரு ஆதார நூலாக ஏற்க முடியாது….எந்த பிரசித்தி பெற்ற சரித்திர நூலும் இந்த கதையை கூறவில்லை.நபியின் காலத்தில் ,ஒரு இந்தியர்,இஸ்லாத்தை தழுவினார் என்றால்,ஏன் எந்த சஹிஹ் புக்ஹாரி,சஹிஹ் முஸ்லிம் ஹதீஸில் இது கூறப்படவில்லை ?? இஸ்லாத்தை தழுவிய பலரின் வரலாற்றை கூறும் ஹதீஸ்களில்,ஏன் இந்த வரலாறு இடம் பெறவில்லை ?? எந்த சுன்னி,ஷியா நூலும் இதை கூறவில்லை…என்ன காரணம் ?? ஸ்ரீதர மெனன் என்பவர் சொல்கிறார் :

” இந்த     சேரமான் கதையை எந்த சரித்திர நூலும் அங்கீகரிக்கவில்லை, ஆதரவு தரவில்லை.கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் எவரும் தங்களின் பயண நூல்களில் இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டவில்லை,குறிக்கவில்லை.சுலைமன், அல் பிருணி, துலேடா பெஞ்சமின் , அல் கஜ்வினி, மார்கொ போலோ, பிராயர் ஓடொரிக், பிராயர் ஜொர்டனஸ், இப்னு  பத்துத்தா, அப்துர் ரசாக்,நிக்கொலொ-கொந்தி போன்ற பிரசித்தி பெற்ற பயணிகளும் தங்களின் பதிவுகளில் இந்த சம்பவத்தை குறிக்கவில்லை.”

இந்த சேரமான் பெருமாள் கதை ,16-ஆம் நூற்றாண்டில்,ஷைக் ஜைனுடின் எழுதிய துஹபாத் -உல்-முஜஹிடீன் என்ற நூலில் குறிபிடப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த நூலாசிரியரே அதை உண்மையென   சொல்லவில்லை,அவரும் அதை சந்தேகிக்கிறார்.இந்த நூலும்,இஸ்லாமிய நூல் அல்ல…குரான் ஹதீஸ் கருத்தை கூற வந்த நூல் அல்ல..மாறாக கேரளாவில் உள்ள மாப்பிள்ளை முஸ்லிம்களுக்கும் போர்துகிஸ்யர்களுக்கும் நடந்த போராட்டத்தை கூறும் ஒரு இஸ்லாமிய சரித்திர நூல்….இது சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு ஆதார நூலும் இல்லை…ஸ்ரீதர  மெனன் மேலும் குறிப்பிடுகிறார் கேரளாவில் சேரமான் பெருமாள் என்ற அரசனே இல்லையென்று.ஆனால்,சைவத்தில் சேரமான் பெருமாள் என்ற நாயனார் ஒருவர் இருந்திருக்கிறார்,ஆனால் இவர் சிவலோக பதவியடைந்தது கிபி 825,அதாவது ,முகமது இறந்து 200 வருஷங்கள் பிறகு.

பார்த்தீர்களா முகமதிய முல்லாக்களின் புளுகுகளை. இந்த அல்லாவை கும்பிடும் இந்த முல்லாக்கள் குல்லாவை போட்டால்,மூளையை பயன்படுத்தவே மாட்டேங்கிறார்கள். புளுகினாலும் இடம் தெரிந்து, செய்தி தெரிந்து புளுக   வேண்டாமா ?  வேறு ஒன்றுமில்லை, ‘இந்துக்களை’ தங்களின் சமயத்துக்கு இழுக்கத்தான் இம்மாதிரியான சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள்.இந்த   பொய் கதையை, இன்றும் இஸ்லாமிய புளொகுகளில் பார்க்கலாம். இஸ்லாத்தின் ‘மேன்மையை’ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணர்த்தவும், ‘இந்துக்களே’ இஸ்லாத்தின் ‘புனிதத்தை’ உணர்த்து அதை ஏற்றுக்கொண்டதாகவும், முஸ்லிம்கள் அவர்களை வற்புறுத்தி மதம் மாற   செய்யவில்லையென்றும் அப்பாவி மக்களுக்கு காட்டி,அவர்களை ஏமாற்றத் தான் இந்த தந்திரம்.  இஸ்லாமிய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை மறைத்து மனித   நேயத்தையும் சேர்த்து மறைக்கப்பார்க்கிறார்கள்..மேலும்,சேரமான் பெருமாள் என்ற இந்திய மன்னர்,இஸ்லாத்தை ஏற்றதாக எந்தவிரு இஸ்லாமிய ஆதார நூலும் கூறவில்லை..ஆகையினால்,இது புனையப்பட்ட ஒரு கட்டுக்கதையே என்பதை உணர்வது நலம்…


எங்கும் இல்லாத வேடிக்கையான ஒரு நிகழ்வு தமிழகத்தில் உண்டு. அதாவது, எதாவது ஒரு பழமையான அரசனின் வரலாறுகள் நமக்கு சரியான தரவுகளுடன் கிடைக்கவில்லையெனில் அதனுடன் சேர்த்து புனைவுக் கதைகளை எழுதி பரப்பி விடுவார்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 ஆண்டுகளுக்கு முன்பு என்று குத்துமதிப்பாக காலக்கணக்குகளை எழுதி ஏதோ வரலாற்று ஆவணங்கள் உருவாக்குவதுபோல் உருவாக்கி அவற்றை நம்ப வைத்தும் விடுவார்கள்.





இதன் அடிப்படையில் பாரத பிரதமர் சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழகத்தில் முதல் மசூதி சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் மெக்காவுக்கு சென்ற பின்பு அவரின் விருப்பப்படி  கட்டப்பட்டது என்றும் இது கட்டப்பட்ட காலகட்டமாக கிபி 7 ஆம் நூற்றாண்டையும் சொல்கிறார்கள். சேரமான் பெருமாள் என்ற பெயர் ஒருவரை குறிக்கும் பெயர் அல்ல என்பதே இங்கு பலருக்கு தெரியாது. சேரமான் என்று அழைப்பது அரச மரபை குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பெயரே ஆகும். அந்த பெயரில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு சேர மன்னன் இருந்தான் என்பதற்கு எந்த விதமான இலக்கிய தொல்லியல் சான்றுகளும் இல்லை. ஆனால் புறநானூறு, பதிற்றுப்பத்தின் வாயிலாக ஆறாம் நூற்றாண்டிற்கு முன்புவரை சேர மன்னர்கள் இருந்தமைக்கு நம்மிடம் சான்றுகள் உண்டு...!
சேரமான் பெருஞ்சோற்று உதயன் சேரலாதன், சேரமான் கருவூரேறிய கோப்பெருஞ்சேரல் என்ற பெயர்களிலெல்லாம் சேர மன்னர்கள் இருந்ததை நமது இலக்கியங்கள் பறைசாற்றும். ஆனால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் வாழ்ந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆவணங்களும் நம்மிடம் இல்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக சேரர்களின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆய்வாளர் ஔவை துரைசாமி அவர்கள் இந்த சேரமான் பெருமாள் கட்டிய மசூதி என்ற புனைவுக் கதையை ஏற்கவில்லை என்பது கூடுதல் தகவல்...!
சரி...🤔 இந்த கதை முதலில் எங்கே உள்ளது என்று தேடினால் கேரளோல்பதி என்ற  நூலில் இதுபற்றிய கதைகள் இருந்தாலும்
இந்த கதையை முதன் முதலில் கிபி1510-ல் பதிவு செய்தவர், போர்ச்சுகீசிய எழுத்தாளர் "Duarte Barbosa" என்பவராகும். இவர் இந்நிகழ்வை தோராயமாக கிபி 900 க்கு பின் நடந்ததாக குறிப்பிடுகிறார். முக்கியமாக அவர் எழுதிய காலத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பதிவு செய்துள்ளார். இது நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக இதற்கு 80 ஆண்டுகள் கழித்து ஷெய்க் செய்னுப்தின் என்ற அரபு மலையாளி இந்த கதையை எழுதுகிறார். அவரும் இந்த கதை நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் நடை பெறவில்லை என்றும், அதற்கு 200 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது என்றே பதிவு செய்கிறார். அடுத்ததாக கிபி1610-ல் Jaos De Barros என்ற இன்னொரு போர்ச்சுகீசிய எழுந்தாளர் ஒரு வித்தியாசமான கதையை பதிவு செய்கிறார். அதாவது அரபு வணிகர்களால் சேரமான் பெருமாள் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டார் என்றும் தனது கடமையை முடிக்க மெக்கா பயணம் புறப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.
Diogo De Coutos என்பவர் இந்தக்கதையில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது சேரமான் பெருமாள் புனித தோமையாரால் கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அவர்கள் தூண்டுதலின் பெயரில், சேரமான் கிறிஸ்தவராக மாறியதாகவும் எழுதியுள்ளதாக இக்கதையை ஆய்ந்து எழுதிய துளசிதாசர்  பதிவு செய்கிறார்.
இப்படிதான் 20 ஆம் நூற்றாண்டில் ராகுல் சாங்கிருதாதியான் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற நூலை ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக தூக்கி சுமந்தார்கள். ஆனால் இந்த சேரமான் கட்டிய மசூதியின் கதைக்கு அந்த நூலில் எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லை. இதைப்போன்று எழுதப்பட்டதே சபரிமலை வாவர் கதையும், குந்தவை நாச்சியார் மதம் மாறிய கதையும். முதலில் வீடு போன்று இருந்த ஒரு அமைப்பு இன்று மசூதியாக மாறியுள்ளது என்று கேரளத்து வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இக்கூற்றை மறுத்துள்ளனர். இதற்கு மேலாக இந்த வீடு போன்ற அமைப்பு முதலில் கிழக்கு நோக்கி மசூதி கட்டப்படுவதற்கு நேர் எதிராகவும் மசூதிக்கான கட்டிட அமைப்புகள் இல்லை என்பதாலும் இது மசூதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே பெருவாரியான அறிஞர்களின் கூற்றாகும்...!
இறுதியாக, பாரத பிரதமர் மட்டுமல்ல இந்த உலகமே திரண்டு வந்து எந்த ஆவணங்களும் இல்லாத ஒரு நிகழ்வை உண்மை என்று கூறினால் அதை முதலில் எதிர்ப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு வாவர் கதையில் ஆரம்பித்து குந்தவை நாச்சியார் வரை இங்கு உடைக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் ஏராளம். ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் வாழ்ந்த அந்த சேரமான் பெருமாள் மெக்கா சென்றது பற்றியோ அவர் ஒரு மசூதியை கிழக்கு பார்த்து😴 கட்டினார் என்பதற்கோ எதாவது தகுந்த ஆவணங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள் என்று உங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவன்...!
- பா இந்துவன்



" சோழர் கால நிலவுரிமை "

சோழர் காலத்தில் நிலங்கள் அனைத்தையும் பார்ப்பனர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார்கள் என்ற கூக்குரல் அவ்வப்போது எழுவதும் .. நாமும் பதில் சொல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.




இப்போது மீண்டும் அதே குரல். மீண்டும் அதே பதில்.
குறிப்பாக..
தஞ்சை கருந்திட்டாக்குடி கல்வெட்டு. பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சாதியினரின் நிலங்களை பறித்து குந்தவையார் பார்ப்பனர்களுக்கு கொடுத்தாராம்.
இச் செய்தியில் இரண்டு திருத்தம். குந்தவை நாச்சியார் நிலங்களைப் பறிக்கவில்லை. காசு கொடுத்து வாங்கினார். பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவில்லை. கோவிலுக்கு கொடுத்தார்.
இது தவறான செயல்தானே என்று கேட்பவர்களுக்கு பதில்
இப்பதிவின் முடிவில்.
இதேபோல்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயத்தை ரத்து செய்து அதை தேவதானமாக மாற்றி கோவிலுக்கு கொடுத்த ஆவணம்தான் திருவாலங்காடு செப்பேடு.
ஆக..
குந்தவை .. ஊர்சபைக்குச் சொந்தமான நிலங்களை காசு கொடுத்து வாங்கி அதை விளக்கெரிக்கும் தானமாகக் கோவிலுக்குத் தருகிறார்.
இராஜேந்திரசோழன்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயத்தை ரத்து செய்து அவர்களின் நிலங்களை தேவதானமாக மாற்றி திருவாலங்காடு மகாதேவர் கோவிலுக்குக் கொடுத்தார்.
மேற்கண்ட இரண்டு செய்தியின் சாரத்தை முழுமையாக அறிவதற்கு முன் சோழர்கால நிலவுடமை பற்றிய செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தது என்பது முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்.
அவ்வாறு இல்லை. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதிமங்களம் பற்றிய செய்திகளை மட்டும் திரும்ப திரும்பக் கூறி ஒரு பொய் பிம்பத்தை கட்டமைத்துள்ளனர்.
யாருக்கெல்லாம் நில உரிமை இருந்தது...?
பரம்பரை பரம்பரையாக ஒரு நிலத்தின் உரிமையை பெற்றவர்கள் வெள்ளான் குடிகள் ஆவார். இவர்களது நிலம் முழுக்க முழுக்க இவர்களது உரிமை. கல்வெட்டில் தங்கள் காணி என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் குறிப்பிடுவர்.
சிறு நிலம் வைத்திருப்போர் முதல் பெரும் நிலக்கிழார் வரை இப்பிரிவில் அடங்குவர். இவர்களது நிலத்தின் விளைச்சலுக்கேற்ப அரசுக்கு வரி செலுத்துவார்கள். இவர்கள் இறைகுடிகள் என்றும் கல்வெட்டு குறிப்பிடும். இவர்கள் விருப்பம் போல் தங்கள் நிலத்தை யாருக்கும் விற்பனை செய்ய முழு உரிமையுண்டு.
அதேபோல் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விருப்பம் போல் தானம் செய்யவும் உரிமையுண்டு.
சிறு நிலம் வைத்திருப்போர் தாங்களே உழுதுகொள்வார்கள். பெரும் நிலம் வைத்திருப்போர் வேலைக்கு ஆட்கள் வைத்திருப்பர். இந்த வெள்ளான் குடிகள்தான் பெரும்பாலும் தன் உரிமையுடைய நிலவுரிமையாளர் ஆவார்கள்.
அரசும் ..
ஊர்சபையும் ..
வசதிபடைத்தோரும் ..
நிலங்களை வெள்ளான் குடியினரிடமிருந்து காசு கொடுத்து வாங்கி அவற்றை வரிநீக்கி கோவிலுக்கோ மற்ற காரியங்களுக்கோ தானம் செய்வார்கள்.
இனி..
இறையிலி எனப்படும் வரியில்லா நிலங்கள் பற்றிப் பார்ப்போம்.
தேவதானம் என்பது சிவன் கோவிலுக்குத் தானமாக வழங்கபட்ட நிலம். அந்நிலத்தின் இறை வருவாய் அனைத்தும் அரசை சேராமல் கோவில் பணிகளுக்குப் பயண்படும்.
திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்குத் தானமாக வழங்கபட்ட
இறையிலி நிலம்.
பள்ளிச் சந்தம் என்பது பௌத்த மற்றும் சமணர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம்.
அய்யன் போகம் என்பது
கிராமத்தில் இருக்கும் சாஸ்தா என்னும் ஐயனார் கோவில் இறையிலி நிலம்.
மடப்புறம் என்பது மடங்களுக்காக கொடுக்கப்பட்ட நிலம்.
சாலாபோகம் என்பது அறச்சாலை மற்றும் உணவுச்சாலைக்காக கொடுக்கப்பட்ட இறையிலி நிலம்.
அர்ச்சனா போகம்.
சிவன் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
அம்பலப்புறம்.
கிராமசபை கூடும் மண்டபத்தின் நிர்வாகச் செலவுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
வெட்டி பேற்றூர்.
ஊர் பொது அலுவலனுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
வைத்தியபோகம் என்பது மருத்துவம் பார்க்கும் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் இறையிலி.
அரசு அதிகாரிகள் மற்றும் வேலையாட்களுக்கு
போகம், விருத்தி, காணிபேறு, புறம், பட்டி, என்ற பெயர்களில் இறையிலி நிலங்கள்.
நிருத்தபோகம் என்பது விழாக்காலங்களில் கூத்து நடத்துபவர்களுக்காக வழங்கப்பட்ட இறையிலி நிலம்.
மகாபாரம் படிக்க பாரத விருத்தி. வேதம் படிக்க பட்டவிருத்தி.
கோவில்களில் தேவார திருமுறைப் பதிகங்கள் பாடுவோருக்கு திருப்பதிக காணி என்ற பெயரில் இறையிலி நிலம்.
கணக்கெழுதும் அலுவலர்களுக்கு கணக்கக்காணி.
தேவரடியார் பெண்களுக்கு பதியிலார்காணி.
நடனம் சொல்லித் தரும் ஆசிரியனுக்கு நட்டுவக்காணி.
பாணர்களுக்கு பாணக்காணி.
கோவில்களை கூட்டி சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு மெழுகுப்புறம்..
போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதிரப்பட்டி.
அறச்செயல் புரிவோருக்கு வழங்கப்படும் அறப்புறம்.
ஏரி போன்ற நீர் நிலைகளை பராமரிப்பு செய்து பாதுகாப்போருக்கு ஏரிப்பட்டி.
அரசுக்கு பணி செய்யும் பார்ப்பனச்சேரி, பறைச்சேரி,
அரசு உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஏகபோகம் மற்றும் சீவிதம்.
இன்னும் நிறையவே உள்ளன.
மேற்கண்ட நிலங்கள் அனைத்தும் வரியில்லா இறையிலி நிலங்களாகும்.
இந்த வரிசையில்தான் பிராமணர்களுக்கு வழங்கப்படும் பிரம்மதேயம். நான்கு வேதங்களை கற்ற பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்களம் என்ற பெயரில் இறையிலி நிலங்கள் வழங்கப்பட்ட்டன.
ஏராளமானப் பணியாளர்களின் வரிசையில்தான் பிராமணர்களுக்கும் வரியில்லா நிலங்கள் வழங்கப்பட்டன.
பிராமணர்களுக்கு மட்டும் நிலதானம் என்பது வரலாற்றுப் பொய்.
சதுர்வேதி மங்கள கல்வெட்டுகளை மட்டும் காட்டி இப்படி ஒரு பொய் பிம்பம் வலிந்து கட்டமைக்கப்படுகிறது.
மற்றப் பணியாளர்களுக்கான இறையிலி நில கல்வெட்டுத் தரவுகள் ஏராளமாக உள்ளன.
கோவில் பணி.
அறச் செயல். வேதம் வாசித்தல். நல்ல நாள் குறித்தல். ஆலோசனை வழங்குதல். கோவில் நிர்வாகம். நிவந்தங்களை சரிபார்த்தல். விழாக்களை ஏற்பாடு செய்தல் இம்மாதிரியான பணிகள் செய்த பிராமணர்களுக்கு
வருவாயாக இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டன.
ஆக..
மேற்கூறிய அனைத்து இறையிலி நிலங்களும் அரசு மற்றும் ஊர்சபைக்கு சொந்தமான நிலம்.
வெள்ளான் வகை என்பது முழுக்க தனிநபருக்கு உரிமையான நிலம்.
இறையிலி நிலம் என்பது..
அரசால் வழங்கபட்ட வரியில்லா நிலம். நிலத்தைப் பெற்றோர் தங்களது நிலத்தில் தாங்களே உழுது பயிர்செய்வோர் மீயாட்சி என்றும்.. மற்ற ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் கொடுத்தால் பயிரிடும் உழு குடிகளின் உரிமை காராண்மை என்றும் கலேவெட்டில் குறிக்கப்படுகிறது.
காணியாட்சி என்னும் ஒரு வகை நிலம் உண்டு. கோவிலில் பணி செய்யும் ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிலம். இந்நிலம் கோவிலால் தானமாக வழங்கப்பட்டது என்றாலும் இது இறையிலி நிலம் அல்ல. காணியாட்சி நிலத்திற்கு வரி உண்டு.
இவ்வரியின் பெயர் காணிக்கடன்.
பிரம்மதேயம் என்பது பிராமணர்களின் இறையிலி நிலம். அதன் கீழ் உள்ள காணி என்பது கோவில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்.
மேற்கூரிய செய்திகள் அனைத்தையும் நினைவில் வைத்து .. இவர்கள் குறை கூறும் ஒரு கல்வெட்டு செய்தி. அதையொட்டிய ஒரு செப்பேடு .. இரண்டையும் பார்ப்போம்.
தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை என்னும் ஊரில்
வசிஷ்டேஸ்வரர் கோவில் கல்வெட்டு. இராஜராஜனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் கருந்திட்டாங்குடி ஊர்சபையில் பிராமணர் மற்றும் அதன் கீழ் உள்ள மற்ற சாதியினரின் காணி செய்வார் நிலங்களைத்தவிர. . காணியாட்சி பெற்று அதன் உடையவர் இல்லாமல் பணி செய்ய முடியாமல் ஊர்சபை கட்டுபாட்டில் உள்ள காணி நிலத்தை காசு கொடுத்து வாங்கி மகாதேவர் கோவிலுக்கு விளக்கெரிக்கத் தானமாகக் கொடுக்கிறார்.
இதுதான் கல்வெட்டு செய்தி.
இக் கல்வெட்டுச் செய்தியை தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுத் தொகுதியில் பதிப்பித்தவர்கள் கல்வெட்டுக்கு முன்னொட்டாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
"குறிப்புரை:
முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் பிராமண ஊர்களில் பிரமதேயம் மற்றும் பிற ஜாதிகளைச் சார்ந்தவர்களில் காணியாகப் பற்றிருந்த நிலம் ஆகியவற்றைத் தவிரப் பிறரின் நிலங்களைக் கட்டாயமாக விற்றுத் தரும்படி மன்னன் ஆணையிட சாத்தம்பி என்ற அரிகாரி எண்பத்து ஒன்றரையே மூன்று மா அரைக்காணி நிலத்தை கையகப்படுத்தி பிரமதேயம் மூலமாக மன்னன் இராஜராஜ சோழனின் சகோதரி ஸ்ரீகுந்தவைப்பிராட்டியார்க்கு விலைக்கு விற்ற செய்தியும் அவர் அந்நிலங்களைக் கோயிலுக்கு நொந்தா விளக்கெரிப்பதற்குக் கொடையளித்த செய்தியும் காணப்படுகிறது."
மேற்கண்ட செய்தியில்
இரண்டு விடயங்கள் கல்வெட்டில் இல்லை.
கட்டாயமாக விற்றுத் தரும்படி என்ற சொல் கல்வெட்டில் இல்லை.
மன்னரின் உத்திரவுதான் நிறைவேற்றப்படுகிறது.
நில உரிமையுள்ள எவர் ஒருவர் நிலமும் விற்கப்படவில்லை.
பிறரின் நிலங்களும் விற்கப்பட்டத் செய்தியும் இல்லை. ஊர் சபைக்கு சொந்தமான காணியாட்சி நிலம்தான் விற்கப்பட்டது. " மகா சபையோர் விற்றுக் கொடுத்த நிலம் " என்று தெளிவாகக் கல்வெட்டில் வருகிறது.
( கல்வெட்டு வாசகம் இணைப்பில்)
இந்தக் கல்வெட்டின் மிகச் சரியான விளக்கத்தை வரலாற்று அறிஞர்
திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தான் எழுதிய தஞ்சாவூர் நூலில் பதிவு செய்கிறார்.
"மன்னன் முதலாம் இராசராச சோழன்.
காலம் : 17ஆவது ஆட்சியாண்டான கி.பி. 1002
செய்தி: நித்தவிநோத வளநாட்டு, நல்லூர்நாட்டுப் பிரமதேயமான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து (தற்போது இவ்வூர் பாபநாசம் வட்டத்தில் இராசகிரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) ஊர்ச்சபையார் மாமன்னரின் ஆணைப்படி, அவருடைய சகோதரி குந்தவைப்பிராட்டி பெயரில் கருந்திட்டைக்குடி மகாதேவர் கோயிலுக்காக விற்றுக் கொடுத்த நிலை யாவணம்.நல்லூர்நாட்டுப் பிரமதேய கிராமங்களில் பிராமணர்களுக்குக் கீழ்ப்பட்ட சாதியினர்
குறிப்பிட சில பணிகளுக்காக முன்பு காணியாகப்பெற்று அனுபவிக்கும் நிலங்களில்
தற்போது குறிப்பிட்ட அப்பணிகளைத் தவறாமல் செய்து கொண்டு அவ்வுரிமையால்
அனுபவிக்கப்பெறும் நிலங்களைத் தவிர, பணியாளர்கள் இல்லாமல்
ஊர்ச்சபையினரிடமுள்ள நிலங்களை விற்குமாறு, இராசராசன் ஆணையிட, இதனை அதிகாரிகள் வானவன் மூவேந்த வேளாரும், சாத்தம்பியாரும் நிறைவேற்ற, இராஜகேசரி
ஊர் மகாசபையினர் விற்றனர்.
இவ்வாறு விற்கப்பட்ட நிலத்தைக் குந்தவைப் பிராட்டியார் விலை கொடுத்து வாங்கி, தஞ்சாவூர்ப் புறம்படி வடவாற்றில் வடகரை, கருந்திட்டைக்குடி இறைவற்கு நுந்தாவிளக்கு எரிப்பதற்காக அளித்தார்.
இராஜேகேசரி சதுர்வேதிமங்கலத்துச் சபையினருக்காக இந்த ஆவணத்தில் அவ்வூர் மத்தியஸ்தன் திருவேங்கடவன் ஆயர்கொழுந்தினனும் மற்றும் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு வாங்கப்பட்ட நிலத்தின் வருவாயைக் கொண்டு இராசராச சோழனின் 17ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1002 இலிருந்தே நுந்தாவிளக்கு எளிப்பதற்காகக் கொடுத்தேன் என்றதை ஆவணமாக எழுதியது குந்தவை நாச்சியாரின் அதிகாரிகளான தென்னவன் எரியூர்நாட்டு வேளான், நாகமங்கிழான், பூவனூருடையான் வரகுணன், மருதங்குடையான் மயிலாட்டி ஆச்சன் ஆகியவர்கள் ஆவர்."
( தஞ்சாவூர் நூல்.
பக் 124. குடவாயில் பாலசுப்ரமணியன்)
இதுதான் இந்த கல்வெட்டின் சரியான விளக்கம்.
ஆனால்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயம் ரத்து செய்யப்பட்ட தகவலும் உண்டு.
திருவாலங்காடு செப்பேடு.
செயங்கொண்ட சோழமண்டலத்தில் மேன்மலை பழையனூர் சிங்களாந்தக சதுர்வேதி மங்கலத்தில் உட்பட்ட பிரம்மதேய பழையனூரை வெள்ளான் வகை கிராமமாக மாற்றி திருவாலங்காடு மகாதேவருக்கு தேவதானமாக அளிக்கப்பட்டது. இதுவரை பிரம்மதேய வருவாயாகக் கிடைத்த
ஆண்டுக்கு
3238 கலம் நெல்..
193 கழஞ்சு தங்கம் ..
கோவிலுக்கு வருமானமாக கிடைத்தது.
ரத்து செய்யப்பட்ட பழையனூர் ஊர்சபைக்குப் பதிலாக
மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதிகொடுக்கப்பட்டது.
இறுதியாக...
சோழர்கள் குடிமக்களின் நிலங்களை பறிமுதல் செய்து பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள் என்று ஒற்றை வரியில் எழுதிவிடுகிறார்கள்.
அவ்வாறு இல்லை என்று மறுத்து பதிவிட நாம்தான் பக்கம் பக்கமாக எழுதவேண்டியுள்ளது.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( Reference ..
தஞ்சாவூர்.
குடவாயில் பாலசுப்ரமணியன்.
சோழர் செப்பேடுகள்.
முனைவர் க.சங்கரநாரயணன்)

குந்தவை நாச்சியார்,

 

சோழ மன்னன் இராஜ இராஜனின் தங்கை குந்தவை நாச்சியார் இஸ்லாத்துக்கு மாறினாரா? ஒட்டகத்தை கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்து கடைசியில் வரலாற்றையே கடிக்க தொடங்கிவிட்டார்கள்!

-----------------------------------------------------------------------------------
குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவரான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவார். மிகுந்த ஆன்மீகப் பற்ருடைய இவர் பல திருக்கோவில்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். இதில் தஞ்சை பெரியக் கோவிலும் அடக்கம்.
குல்லாக்கள் கொடுக்கும் ஆதாரம்:
-----------------------------------------------------
புருடா 1:
-------------
குந்தவை நாச்சியார், இஸ்லாம் மதத்துக்கு மாறிய இடம்," சமயபுரம்" எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய குறிப்புகள் காணப் படுகிறது! சமயபுரம் "கோயில் தல வரலாறும்" அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளது!
நிஜம் 1:
-----------
இது ஒரு சோழ மன்னர் (இராஜ இராஜன்) தன் தங்கைக்கு (குந்தவை நாச்சியார்) சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
புருடா 2:
-------------
சமய பு(ர)றம் என்ற பெயர், காரணப் பெயராக இருப்பதையும் காணலாம்! குந்தவை இதுநாள் வரை தான் சார்ந்து இருந்த.. மதத்தை புறம் தள்ளி, புதிய மதத்தை தழுவிக் கொண்டதால் சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது எனத் தோன்றுகிறது!
நிஜம் 2:
-----------
சமயபுரத்தின் வரலாற்றுப் பெயர்கள், கண்ணனூர்
கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் ஆகும். எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். உலகில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் இதுதான் தலைமை பீடம். அதனால் இவ்வூர் சமய (தலைமை) + புரம்(ஊர்) என்று பெயர் பெற்றது.
புருடா 3:
-------------
குந்தவை நாச்சியாருக்கு கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன் விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே இந்துமதத்தை விட்டு நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது!
நிஜம் 3:
-----------
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினார். இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் விழா எடுத்தலுக்கும் மதம் மாறியதுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? திதி கொடுப்பதேயானாலும் திதி என்பது விழாவா?
புருடா 4:
-------------
குந்தவை தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள் தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்! தனது சகோதரியின் மீது பெருமதிப்பும், அன்பும் கொண்ட ராஜராஜன் பெரிய கோவிலுக்கு தான் கொடுத்த அறகொடையுடன், தனது சகோதரி குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து, "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி" என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!
நிஜம் 4:
-----------
என்னக் கொடுமை ஐயா இது! கி.பி 1006 முன் குந்தவை நாச்சியார் மதம் மாறியதாக சொல்றீங்க. அதர்கான தண்டனையா இராஜ இராஜன் சடங்கு செய்து தங்கையை விலக்கி வைத்தார்னு சொல்றீங்க. பின்பு த்ங்கையின் கொடைக்காக தஞ்சை பெரியக் கோவில் கல்வெட்டில் தங்கை பெயரை பதிக்க உத்தரவிட்டதாகவும் சொல்றீங்க.... ஏன் இத்தனை முரண்பாடு?
புருடா 5:
-------------
குந்தவை இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்து, இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில், "இந்துமத வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விளக்கில் நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற " வழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது!
நிஜம் 5:
-----------
குந்தவை நாச்சியார் தனது இறுதிகாலத்தை தஞ்சையில்தான் கழித்தார் என்பதற்கும் கோவில் சிற்பங்களும் சிதளம் அடைந்த கோவிலும் வரலாற்றுச் சான்றாக இன்றும் தஞ்சையில் உள்ளது. ஆதாரங்கள் படங்களில் காண்க......
புருடா 6:
-------------
குந்தவை இஸ்லாம் மதம் மாறியது கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012 இடையில் ஒருநாள் என்பதை ராஜராஜனும் அவனது மனைவி லோகமாதேவியும் (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும் சாதிமாற்ற சடங்கினை செய்ததில் இருந்து அறியவருகிறது!
நிஜம் 6:
------------
முதலில் இந்த பதர்களுக்கு ஹிரண்ய கர்பம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஹிரண்யம் என்றால் பொன் என்று பொருள், விஷ்னு என்றும் பொருள்படும். ஹிரண்ய கர்ப தானம் எதற்காக செய்வார்கள் எனில் இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்றும், இனி எந்த சூழ்நிலையில் கர்பத்தின் வாயிலாக ஒரு பிறப்பு வேண்டாம் என்பதற்காக செய்யப்படுவது. இந்த யாகத்தை எவ்வாறு செய்வார்கள் எனில், பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது - இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் - பிறவா வரம் பெற செய்யும் யாகம்.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினாராம்.
அங்கு ஹிரண்ய கர்ப்பம் என்ற சடங்கில் பட்டத்தரசி உலகமாகாதேவி உள்ளே புகுந்து வெளியே வரக்கூடியளவு பெரிய பொன்னாலான பசு ஒன்றைச் செய்து, பூசைகளின் பின்னர், அந்த பொன்னாலான பசுவைப் பிரித்து கோயில் பூசாரிகளுக்கு தானமாக அளித்தார்.
அந்த நிகழ்ச்சியை நினைவு கூருமுகமாக திரிவிசலூரிலுள்ள சிவயோகனாதர் ஆலயத்தின் சுவரில் மாமன்னன் ராஜ ராஜ சோழனதும், அவனது பட்டத்தரசியினதும் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார் பிரிட்டனின் வரலாற்று ஆராய்ச்சியாளர் Michael Woods.( The Story of India - Ages of Gold ) சிவயோகநாதர் ஆலயம் திருவிசாலூர் - கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் - உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”
-----------------------------------------------------------------------------------
இவர்களாகவே ஒரு இடத்தில் தர்கா கட்டி முட்டிப் போட்டால் அது குந்தவை நாச்சியாரின் சமாதி ஆகிவிடுமா? அல்லது விளக்கு ஏற்றி பூஜை செய்தால் அது உண்மையாகிவிடுமா? சபரிமலைக்கு வாபர் மசூதி கட்டுக் கதைன்னா குந்தவை நாச்சியாருக்கு சமயபுரத்தில் தர்கா அவ்வளவுதான். இவர்கள் முன்வைக்கும் எதற்க்கும் வரலாற்று சான்று துளியும் கிடையது.......





இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இதுபோன்ற வரலாற்றுத்திரிபுகள் வலம் வருகின்றன. நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காதபோதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றிவிடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவை தொடர்கிறேன்...!
முதலில் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வுநூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.
1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.
2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.
3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.
4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.
5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.
6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது. அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.
7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.
இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்துசென்றுள்ளார் ஆசிரியர். சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன...!
இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும். குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை...!
பொ.ஆ 1004 வரைதான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல்தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார். இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது.
அது என்ன🤔🤔🤔🤔
பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?
அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள்
மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே...!
வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மதமாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள்மீது காட்டியுள்ளார். ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?
"ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே"
- திருமந்திரம்.
12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததை திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இது கொடுமணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,
" கண்ணன் ஆதன் "
இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது. அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்...!
அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார் என்பதைத்தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு கிறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று
பொருள் அல்ல. இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள்தான் அந்நூலில் இடம்பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை...!

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...