கேரளாவில் இருக்கும் கொடுங்கலூரில் இருக்கும் சேரமான் ஜுமா மஸ்ஜிட் தான் இந்தியாவிலே மிகவும் பழமைவாய்ந்த மசூதியாம்…கிபி 629 இல், மலிக் பின் டினாரால் கட்டபட்டதாக கருதப்படுகிறது…இனி,இந்த மசூதியை சூழ்ந்திருக்கும் வரலாற்று செய்தியை பார்ப்போம்.இந்த வரலாற்று செய்தி எதோ சரித்திர புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள்.இந்த கதை “பொய்மை புகழ்” இஸ்லாமியர்கள் சொன்ன கதை. சரி,கதையென்ன என்பதை பார்ப்போம்.கொடுங்கலூரை ஆட்சி செய்த சேரமான் பெருமாள் என்ற சேர மன்னன்,மக்கா சென்று,இஸ்லாத்தை தழுவி,தாஜுடீன் என்ற முகமதிய பெயரை பெற்றானம்.ஜடா வை(jeddah) ஆண்டுக்கொண்டிருந்த ராஜாவின் சகோதரியை மணந்தானாம். பாரதத்துக்கு திரும்பும் போது,மலிக் இப்னு டினார் தலைமை தாங்கிய ஒரு இஸ்லாமி போதகர் கூட்டத்தை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தானாம்.வரும் வழியில்.நோய்வாய் பட்டு, இறந்தானாம்.ஆனால் இறக்கும் முன்பு,கொடுங்கலூரை அடையும் பாதையை ஒரு கடிதத்தில் எழுதி அவர்களுக்கு கொடுத்தானாம்.அந்த கூட்டம், கொடுங்கலூரை அடைந்து,அக்கடிதத்தை அங்குள்ள ராஜாவுக்கு கொடுத்தார்களாம்.அந்த ராஜாவும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து,நன்கு கவனித்து,அவர்களின் சமயத்தை அங்கு பரப்ப அனுமதி கொடுத்தானாம்.பல சிற்பிகளை கூப்பிட்டு அங்குள்ள அரத்தாளி கோவிலை இடித்து,ஒரு மசூதியை கட்ட கட்டளையிட்டானாம்.அந்த மசூதிதான் சேரமான் பெருமாள் ஜுமா மஸ்ஜிடாம்.
முஸ்லிம்கள் சொல்லும் இந்த ‘வரலாறு’ ,கேரலோல்பதி எனும் கேரளத்தின் பூவிகத்தை விவரிக்கும் நூலில் காணப்படுகிறது.இந்த நூலில் ஏகப்பட்ட இடைசெருகல்கள் உள்ளன…ஆகையினால் இதை ஒரு ஆதார நூலாக ஏற்க முடியாது….எந்த பிரசித்தி பெற்ற சரித்திர நூலும் இந்த கதையை கூறவில்லை.நபியின் காலத்தில் ,ஒரு இந்தியர்,இஸ்லாத்தை தழுவினார் என்றால்,ஏன் எந்த சஹிஹ் புக்ஹாரி,சஹிஹ் முஸ்லிம் ஹதீஸில் இது கூறப்படவில்லை ?? இஸ்லாத்தை தழுவிய பலரின் வரலாற்றை கூறும் ஹதீஸ்களில்,ஏன் இந்த வரலாறு இடம் பெறவில்லை ?? எந்த சுன்னி,ஷியா நூலும் இதை கூறவில்லை…என்ன காரணம் ?? ஸ்ரீதர மெனன் என்பவர் சொல்கிறார் :
” இந்த சேரமான் கதையை எந்த சரித்திர நூலும் அங்கீகரிக்கவில்லை, ஆதரவு தரவில்லை.கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் எவரும் தங்களின் பயண நூல்களில் இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டவில்லை,குறிக்கவில்லை.சுலைமன், அல் பிருணி, துலேடா பெஞ்சமின் , அல் கஜ்வினி, மார்கொ போலோ, பிராயர் ஓடொரிக், பிராயர் ஜொர்டனஸ், இப்னு பத்துத்தா, அப்துர் ரசாக்,நிக்கொலொ-கொந்தி போன்ற பிரசித்தி பெற்ற பயணிகளும் தங்களின் பதிவுகளில் இந்த சம்பவத்தை குறிக்கவில்லை.”
இந்த சேரமான் பெருமாள் கதை ,16-ஆம் நூற்றாண்டில்,ஷைக் ஜைனுடின் எழுதிய துஹபாத் -உல்-முஜஹிடீன் என்ற நூலில் குறிபிடப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த நூலாசிரியரே அதை உண்மையென சொல்லவில்லை,அவரும் அதை சந்தேகிக்கிறார்.இந்த நூலும்,இஸ்லாமிய நூல் அல்ல…குரான் ஹதீஸ் கருத்தை கூற வந்த நூல் அல்ல..மாறாக கேரளாவில் உள்ள மாப்பிள்ளை முஸ்லிம்களுக்கும் போர்துகிஸ்யர்களுக்கும் நடந்த போராட்டத்தை கூறும் ஒரு இஸ்லாமிய சரித்திர நூல்….இது சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு ஆதார நூலும் இல்லை…ஸ்ரீதர மெனன் மேலும் குறிப்பிடுகிறார் கேரளாவில் சேரமான் பெருமாள் என்ற அரசனே இல்லையென்று.ஆனால்,சைவத்தில் சேரமான் பெருமாள் என்ற நாயனார் ஒருவர் இருந்திருக்கிறார்,ஆனால் இவர் சிவலோக பதவியடைந்தது கிபி 825,அதாவது ,முகமது இறந்து 200 வருஷங்கள் பிறகு.
பார்த்தீர்களா முகமதிய முல்லாக்களின் புளுகுகளை. இந்த அல்லாவை கும்பிடும் இந்த முல்லாக்கள் குல்லாவை போட்டால்,மூளையை பயன்படுத்தவே மாட்டேங்கிறார்கள். புளுகினாலும் இடம் தெரிந்து, செய்தி தெரிந்து புளுக வேண்டாமா ? வேறு ஒன்றுமில்லை, ‘இந்துக்களை’ தங்களின் சமயத்துக்கு இழுக்கத்தான் இம்மாதிரியான சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள்.இந்த பொய் கதையை, இன்றும் இஸ்லாமிய புளொகுகளில் பார்க்கலாம். இஸ்லாத்தின் ‘மேன்மையை’ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணர்த்தவும், ‘இந்துக்களே’ இஸ்லாத்தின் ‘புனிதத்தை’ உணர்த்து அதை ஏற்றுக்கொண்டதாகவும், முஸ்லிம்கள் அவர்களை வற்புறுத்தி மதம் மாற செய்யவில்லையென்றும் அப்பாவி மக்களுக்கு காட்டி,அவர்களை ஏமாற்றத் தான் இந்த தந்திரம். இஸ்லாமிய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை மறைத்து மனித நேயத்தையும் சேர்த்து மறைக்கப்பார்க்கிறார்கள்..மேலும்,சேரமான் பெருமாள் என்ற இந்திய மன்னர்,இஸ்லாத்தை ஏற்றதாக எந்தவிரு இஸ்லாமிய ஆதார நூலும் கூறவில்லை..ஆகையினால்,இது புனையப்பட்ட ஒரு கட்டுக்கதையே என்பதை உணர்வது நலம்…
எங்கும் இல்லாத வேடிக்கையான ஒரு நிகழ்வு தமிழகத்தில் உண்டு. அதாவது, எதாவது ஒரு பழமையான அரசனின் வரலாறுகள் நமக்கு சரியான தரவுகளுடன் கிடைக்கவில்லையெனில் அதனுடன் சேர்த்து புனைவுக் கதைகளை எழுதி பரப்பி விடுவார்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 ஆண்டுகளுக்கு முன்பு என்று குத்துமதிப்பாக காலக்கணக்குகளை எழுதி ஏதோ வரலாற்று ஆவணங்கள் உருவாக்குவதுபோல் உருவாக்கி அவற்றை நம்ப வைத்தும் விடுவார்கள்.
இதன் அடிப்படையில் பாரத பிரதமர் சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழகத்தில் முதல் மசூதி சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் மெக்காவுக்கு சென்ற பின்பு அவரின் விருப்பப்படி கட்டப்பட்டது என்றும் இது கட்டப்பட்ட காலகட்டமாக கிபி 7 ஆம் நூற்றாண்டையும் சொல்கிறார்கள். சேரமான் பெருமாள் என்ற பெயர் ஒருவரை குறிக்கும் பெயர் அல்ல என்பதே இங்கு பலருக்கு தெரியாது. சேரமான் என்று அழைப்பது அரச மரபை குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பெயரே ஆகும். அந்த பெயரில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு சேர மன்னன் இருந்தான் என்பதற்கு எந்த விதமான இலக்கிய தொல்லியல் சான்றுகளும் இல்லை. ஆனால் புறநானூறு, பதிற்றுப்பத்தின் வாயிலாக ஆறாம் நூற்றாண்டிற்கு முன்புவரை சேர மன்னர்கள் இருந்தமைக்கு நம்மிடம் சான்றுகள் உண்டு...!
சேரமான் பெருஞ்சோற்று உதயன் சேரலாதன், சேரமான் கருவூரேறிய கோப்பெருஞ்சேரல் என்ற பெயர்களிலெல்லாம் சேர மன்னர்கள் இருந்ததை நமது இலக்கியங்கள் பறைசாற்றும். ஆனால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் வாழ்ந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆவணங்களும் நம்மிடம் இல்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக சேரர்களின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆய்வாளர் ஔவை துரைசாமி அவர்கள் இந்த சேரமான் பெருமாள் கட்டிய மசூதி என்ற புனைவுக் கதையை ஏற்கவில்லை என்பது கூடுதல் தகவல்...!
சரி...🤔 இந்த கதை முதலில் எங்கே உள்ளது என்று தேடினால் கேரளோல்பதி என்ற நூலில் இதுபற்றிய கதைகள் இருந்தாலும்
இந்த கதையை முதன் முதலில் கிபி1510-ல் பதிவு செய்தவர், போர்ச்சுகீசிய எழுத்தாளர் "Duarte Barbosa" என்பவராகும். இவர் இந்நிகழ்வை தோராயமாக கிபி 900 க்கு பின் நடந்ததாக குறிப்பிடுகிறார். முக்கியமாக அவர் எழுதிய காலத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பதிவு செய்துள்ளார். இது நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக இதற்கு 80 ஆண்டுகள் கழித்து ஷெய்க் செய்னுப்தின் என்ற அரபு மலையாளி இந்த கதையை எழுதுகிறார். அவரும் இந்த கதை நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் நடை பெறவில்லை என்றும், அதற்கு 200 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது என்றே பதிவு செய்கிறார். அடுத்ததாக கிபி1610-ல் Jaos De Barros என்ற இன்னொரு போர்ச்சுகீசிய எழுந்தாளர் ஒரு வித்தியாசமான கதையை பதிவு செய்கிறார். அதாவது அரபு வணிகர்களால் சேரமான் பெருமாள் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டார் என்றும் தனது கடமையை முடிக்க மெக்கா பயணம் புறப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.
Diogo De Coutos என்பவர் இந்தக்கதையில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது சேரமான் பெருமாள் புனித தோமையாரால் கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அவர்கள் தூண்டுதலின் பெயரில், சேரமான் கிறிஸ்தவராக மாறியதாகவும் எழுதியுள்ளதாக இக்கதையை ஆய்ந்து எழுதிய துளசிதாசர் பதிவு செய்கிறார்.
இப்படிதான் 20 ஆம் நூற்றாண்டில் ராகுல் சாங்கிருதாதியான் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற நூலை ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக தூக்கி சுமந்தார்கள். ஆனால் இந்த சேரமான் கட்டிய மசூதியின் கதைக்கு அந்த நூலில் எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லை. இதைப்போன்று எழுதப்பட்டதே சபரிமலை வாவர் கதையும், குந்தவை நாச்சியார் மதம் மாறிய கதையும். முதலில் வீடு போன்று இருந்த ஒரு அமைப்பு இன்று மசூதியாக மாறியுள்ளது என்று கேரளத்து வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இக்கூற்றை மறுத்துள்ளனர். இதற்கு மேலாக இந்த வீடு போன்ற அமைப்பு முதலில் கிழக்கு நோக்கி மசூதி கட்டப்படுவதற்கு நேர் எதிராகவும் மசூதிக்கான கட்டிட அமைப்புகள் இல்லை என்பதாலும் இது மசூதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே பெருவாரியான அறிஞர்களின் கூற்றாகும்...!
இறுதியாக, பாரத பிரதமர் மட்டுமல்ல இந்த உலகமே திரண்டு வந்து எந்த ஆவணங்களும் இல்லாத ஒரு நிகழ்வை உண்மை என்று கூறினால் அதை முதலில் எதிர்ப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு வாவர் கதையில் ஆரம்பித்து குந்தவை நாச்சியார் வரை இங்கு உடைக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் ஏராளம். ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் வாழ்ந்த அந்த சேரமான் பெருமாள் மெக்கா சென்றது பற்றியோ அவர் ஒரு மசூதியை கிழக்கு பார்த்து😴 கட்டினார் என்பதற்கோ எதாவது தகுந்த ஆவணங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள் என்று உங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவன்...!
- பா இந்துவன்
No comments:
Post a Comment