Tuesday, August 27, 2024

குந்தவை நாச்சியார்,

 

சோழ மன்னன் இராஜ இராஜனின் தங்கை குந்தவை நாச்சியார் இஸ்லாத்துக்கு மாறினாரா? ஒட்டகத்தை கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்து கடைசியில் வரலாற்றையே கடிக்க தொடங்கிவிட்டார்கள்!

-----------------------------------------------------------------------------------
குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவரான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவார். மிகுந்த ஆன்மீகப் பற்ருடைய இவர் பல திருக்கோவில்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். இதில் தஞ்சை பெரியக் கோவிலும் அடக்கம்.
குல்லாக்கள் கொடுக்கும் ஆதாரம்:
-----------------------------------------------------
புருடா 1:
-------------
குந்தவை நாச்சியார், இஸ்லாம் மதத்துக்கு மாறிய இடம்," சமயபுரம்" எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய குறிப்புகள் காணப் படுகிறது! சமயபுரம் "கோயில் தல வரலாறும்" அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளது!
நிஜம் 1:
-----------
இது ஒரு சோழ மன்னர் (இராஜ இராஜன்) தன் தங்கைக்கு (குந்தவை நாச்சியார்) சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
புருடா 2:
-------------
சமய பு(ர)றம் என்ற பெயர், காரணப் பெயராக இருப்பதையும் காணலாம்! குந்தவை இதுநாள் வரை தான் சார்ந்து இருந்த.. மதத்தை புறம் தள்ளி, புதிய மதத்தை தழுவிக் கொண்டதால் சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது எனத் தோன்றுகிறது!
நிஜம் 2:
-----------
சமயபுரத்தின் வரலாற்றுப் பெயர்கள், கண்ணனூர்
கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் ஆகும். எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். உலகில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் இதுதான் தலைமை பீடம். அதனால் இவ்வூர் சமய (தலைமை) + புரம்(ஊர்) என்று பெயர் பெற்றது.
புருடா 3:
-------------
குந்தவை நாச்சியாருக்கு கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன் விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே இந்துமதத்தை விட்டு நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது!
நிஜம் 3:
-----------
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினார். இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் விழா எடுத்தலுக்கும் மதம் மாறியதுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? திதி கொடுப்பதேயானாலும் திதி என்பது விழாவா?
புருடா 4:
-------------
குந்தவை தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள் தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்! தனது சகோதரியின் மீது பெருமதிப்பும், அன்பும் கொண்ட ராஜராஜன் பெரிய கோவிலுக்கு தான் கொடுத்த அறகொடையுடன், தனது சகோதரி குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து, "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி" என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!
நிஜம் 4:
-----------
என்னக் கொடுமை ஐயா இது! கி.பி 1006 முன் குந்தவை நாச்சியார் மதம் மாறியதாக சொல்றீங்க. அதர்கான தண்டனையா இராஜ இராஜன் சடங்கு செய்து தங்கையை விலக்கி வைத்தார்னு சொல்றீங்க. பின்பு த்ங்கையின் கொடைக்காக தஞ்சை பெரியக் கோவில் கல்வெட்டில் தங்கை பெயரை பதிக்க உத்தரவிட்டதாகவும் சொல்றீங்க.... ஏன் இத்தனை முரண்பாடு?
புருடா 5:
-------------
குந்தவை இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்து, இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில், "இந்துமத வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விளக்கில் நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற " வழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது!
நிஜம் 5:
-----------
குந்தவை நாச்சியார் தனது இறுதிகாலத்தை தஞ்சையில்தான் கழித்தார் என்பதற்கும் கோவில் சிற்பங்களும் சிதளம் அடைந்த கோவிலும் வரலாற்றுச் சான்றாக இன்றும் தஞ்சையில் உள்ளது. ஆதாரங்கள் படங்களில் காண்க......
புருடா 6:
-------------
குந்தவை இஸ்லாம் மதம் மாறியது கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012 இடையில் ஒருநாள் என்பதை ராஜராஜனும் அவனது மனைவி லோகமாதேவியும் (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும் சாதிமாற்ற சடங்கினை செய்ததில் இருந்து அறியவருகிறது!
நிஜம் 6:
------------
முதலில் இந்த பதர்களுக்கு ஹிரண்ய கர்பம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஹிரண்யம் என்றால் பொன் என்று பொருள், விஷ்னு என்றும் பொருள்படும். ஹிரண்ய கர்ப தானம் எதற்காக செய்வார்கள் எனில் இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்றும், இனி எந்த சூழ்நிலையில் கர்பத்தின் வாயிலாக ஒரு பிறப்பு வேண்டாம் என்பதற்காக செய்யப்படுவது. இந்த யாகத்தை எவ்வாறு செய்வார்கள் எனில், பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது - இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் - பிறவா வரம் பெற செய்யும் யாகம்.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினாராம்.
அங்கு ஹிரண்ய கர்ப்பம் என்ற சடங்கில் பட்டத்தரசி உலகமாகாதேவி உள்ளே புகுந்து வெளியே வரக்கூடியளவு பெரிய பொன்னாலான பசு ஒன்றைச் செய்து, பூசைகளின் பின்னர், அந்த பொன்னாலான பசுவைப் பிரித்து கோயில் பூசாரிகளுக்கு தானமாக அளித்தார்.
அந்த நிகழ்ச்சியை நினைவு கூருமுகமாக திரிவிசலூரிலுள்ள சிவயோகனாதர் ஆலயத்தின் சுவரில் மாமன்னன் ராஜ ராஜ சோழனதும், அவனது பட்டத்தரசியினதும் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார் பிரிட்டனின் வரலாற்று ஆராய்ச்சியாளர் Michael Woods.( The Story of India - Ages of Gold ) சிவயோகநாதர் ஆலயம் திருவிசாலூர் - கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் - உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”
-----------------------------------------------------------------------------------
இவர்களாகவே ஒரு இடத்தில் தர்கா கட்டி முட்டிப் போட்டால் அது குந்தவை நாச்சியாரின் சமாதி ஆகிவிடுமா? அல்லது விளக்கு ஏற்றி பூஜை செய்தால் அது உண்மையாகிவிடுமா? சபரிமலைக்கு வாபர் மசூதி கட்டுக் கதைன்னா குந்தவை நாச்சியாருக்கு சமயபுரத்தில் தர்கா அவ்வளவுதான். இவர்கள் முன்வைக்கும் எதற்க்கும் வரலாற்று சான்று துளியும் கிடையது.......





இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இதுபோன்ற வரலாற்றுத்திரிபுகள் வலம் வருகின்றன. நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காதபோதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றிவிடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவை தொடர்கிறேன்...!
முதலில் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வுநூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.
1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.
2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.
3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.
4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.
5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.
6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது. அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.
7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.
இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்துசென்றுள்ளார் ஆசிரியர். சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன...!
இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும். குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை...!
பொ.ஆ 1004 வரைதான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல்தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார். இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது.
அது என்ன🤔🤔🤔🤔
பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?
அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள்
மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே...!
வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மதமாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள்மீது காட்டியுள்ளார். ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?
"ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே"
- திருமந்திரம்.
12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததை திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இது கொடுமணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,
" கண்ணன் ஆதன் "
இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது. அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்...!
அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார் என்பதைத்தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு கிறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று
பொருள் அல்ல. இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள்தான் அந்நூலில் இடம்பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை...!

திருவண்ணாமலை இடும்பன் & இளையனார் கோவில் இடித்து ஷாப்பிங் காம்பேளக்ஸ் ஆக உள்ளது

தமிழக சட்டசபையில் 2003ல் காரைக்குடி உறுப்பினர் ஹெச்.ராஜா - திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த இடும்பன் கோவில் &  இளையனார் கோவில் இடித்து ஷாப்பிங் காம்பேளக்ஸ் ஆகியுள்ளது எனப் பேசிய போது, தவறான தகவல் என முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறுத்தார். மதியம் HRCE & காவல்துறை விசாரணை பின்னர் கோவில் இடித்தது உண்மை, மிக விரைவில் ஆக்கிரமிப்பு நீக்கி கோவில் மீண்டும் எழுப்பப் படும் என்றார்

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/seeman-thirumurugan-gandhi-they-are-putting-against-hindus-hraja
 

இன்று வரை இந்து சமய அறநிலையத் துறை இடும்பன் கோவில் கட்டும் பணி தொடங்கியதாக தெரியவில்லை.

HRCE இணையதளத்தில் இந்தக் கோவிலின் பக்கத்தில்- இல்லை என குறிப்பு மட்டுமே உள்ளது

திருவண்ணாமலை பக்த மார்க்கண்டேய கோவில் 2014ல் இடித்து காபிகடை ஆன இடம் HRCE தெரியவில்லையாம்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் இருந்த திருவண்ணாமலை  கிரிவல பாதை, பாலி தீர்த்தம் அருகில் உள்ள பக்த மார்க்கண்டேயர் கோவிலை 2014ல்  இடிக்கப் பட்டு தற்போது  காபி கடை ஆகிவிட்டதாம்.  கோவிலின் உண்மையான இருப்பிடத்தை, மூன்று மாதங்களில் கண்டறிய வேண்டும் ஆறு மாதங்களில் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும் என்று உத்தரவாம்

ஜூலை 30, 2022- சென்னை: திருவண்ணாமலையில், பக்த மார்க்கண்டேய கோவிலின் உண்மையான இருப்பிடத்தை கண்டறிந்து, ஆறு மாதங்களில் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://timesofindia.indiatimes.com/city/chennai/ancient-temple-on-girivalam-path-razed-commercial-building-comes-up-in-its-place/articleshow/66801106.cms

Ancient temple on Girivalam path razed, commercial building comes up in its place

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/seal-complex-built-after-razing-temple-hc-tells-officials/articleshow/67169566.cms


சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சிவபாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'திருவண்ணாமலை கிரிவல பாதை, பாலி தீர்த்தம் அருகில் உள்ள பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து, காபி கடை அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி, கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய, அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் கே.குமரனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3088592 

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த அட்வகேட் கமிஷனர், அறிக்கை தாக்கல் செய்தார்.கோவில் இருந்ததையும், இடிக்கப்பட்டதையும் உறுதி செய்தாலும், கோவில் இடம் பெற்றிருந்த சர்வே எண்ணை கண்டறிய முடியில்லை. காபி கடை உரிமையாளர்கள், தங்கள் கடை முன் கோவிலை மீண்டும் கட்ட, எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவித்திருப்பதாக, அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பு: கோவில்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உள்ளது. புராதன கோவில்களை அழிக்க அனுமதித்தால், அவற்றை நிர்வகிப்பது என்ற கேள்வி எழாது.இந்த வழக்கில், அறநிலையத் துறை கமிஷனர் விரிவான விசாரணை நடத்தி, கோவிலின் உண்மையான இருப்பிடத்தை, மூன்று மாதங்களில் கண்டறிய வேண்டும்.

அந்த இடத்தில், ஆறு மாதங்களில் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும். கோவில் நிலத்தை காபி கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நடைமுறைகளையும் ஒன்பது மாதங்களுக்குள் முடித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Taking strong exception to an FIR filed in connection with the demolition of an ancient temple in the ‘Girivalam’ route in Tiruvannamalai to pave way for the construction of a coffee shop pending for the past four years, the Madras High Court has warned the police personnel of directing the government to suspend them if they failed to act on the registered FIR.

DTNext15 Dec, 2018, Chennai

Holding that it is clear from the report filed by the authorities that Arulmigu Bhaktha Markandeya temple has been completely encroached and the temple was demolished to give way for a multi-storied coffee shop, a special bench comprising Justice R Mahadevan and Justice P D Audikesavalu said “Though FIR was filed in 2014, it still remains in the same stage. No further investigation was carried out. Why have the police authorities been numb all these years?”

The court then directed the Deputy Superintendent of Police and Inspector of Tiruvannamalai Town Police to appear before the court to explain the inaction and observed that it would soon order the demolition of the coffee shop.

Noting that all such encroachments in the temples falling under the administration of Arunachaleswarar Temple should be removed, the bench directed the Hindu Religious and Charitable Endowments Department (HR&CE) to file a report on such encroachments. 

The plea was moved by CM Sivababu, president of Tamil Desiya Makkal Katchi and a resident of Tiruvannamalai.

He had contended that in 2014, residents Venkatesan, Ramesh and seven others encroached upon the land adjacent to the temple and built a coffee shop. Thereafter, they removed the idols, artefacts, and other belongings of the temple including the presiding deity Markandeya, which possesses heritage value, before razing down the temple. Following a complaint to the HR&CE, the authorities in turn filed a case at the Thiruvannamalai Town Police station leading to the arrest of a few persons. But at present, the probe is still pending with the local police showing no interest in probing the case in a bid to safeguard the accused.

Also, noting that the idol of Markandeya was recovered from a well near the temple premises while desilting work done by local administration authorities, the petitioner wanted the court to intervene and transfer the probe to a central independent agency.

Madras HC orders reconstruction of razed temple in Tiruvannamalai

The orders were passed on a petition filed by CM Sivababu, president of Tamil Desiya Makkal Katchi, Tiruvannamalai.

கிருஷ்ணகிரி பட்டாளம்மன் கோவில் & தேன்கனிகோட்டை, நாகமங்கலம் ஹனுமந்தராயசாமி கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கிரானைட் கொள்ளை

கிருஷ்ணகிரி  கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிமவளம் கொள்ளை   

 :ஜூலை 21, 2024 -கோவில் நிலங்களில் இருந்து, சட்டவிரோதமாக 198 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, வரும் 26ல் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உத்தரவு

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உதவி ஆணையரின் அறிக்கை, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

தேன்கனிகோட்டை, நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும்; கிருஷ்ணகிரி, பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

அறநிலையத் துறை அதிகாரிகளால் கூட, கோவில் நிலத்துக்குள் நுழைய முடியவில்லை; அவர்களை கடமையாற்ற விடாமல், சமூக விரோதிகள் தடுக்கின்றனர். இந்த நிலையை, அரசு அனுமதிக்கக் கூடாது.

கிருஷ்ணகிர, தர்மபுரி மாவட்டங்களில் பெரும் அளவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதாகவும், நுாற்றுக்கணக்கில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை, அப்படியே ஒதுக்கி விட முடியாது.

அதனால் தான், சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுப்பதற்கு எதிராக, அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

தேசத்தின் சொத்தை பாதுகாக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. தேசத்தின் சொத்தை, பேராசைக்காரர்கள் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது.

அறநிலையத் துறையின் அறிக்கையில் உள்ள தீவிரத்தை பரிசீலித்து, நீதிமன்றத்தில் ஆஜராக சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

விபரம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் பதிவு உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க வேண்டும்.



இந்த உத்தரவு குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உடனடியாக சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர் தெரியப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., வரும் 26ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


  
https://www.youtube.com/watch?v=MmG__66oSHM
https://www.vikatan.com/crime/money/rs-1000-crore-mineral-smuggling-in-hosur

பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை டி.பி., சாலையில் உள்ள பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த, 1959ல் நடந்தது. 62 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.

நேற்று காலை, 5:45 மணிக்கு கணபதி பிரார்த்தனை, தேவி மஹத்ய ஹோமம், சண்டி ஹோமம், பிராண பிரதிஷ்டாபன ஹோமம், மஹா பூர்ணாஹூதி, கலசம் புறப்படுதல் ஆகியவை நடந்தன. 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், மஹாராஜகணபதி, பட்டாளம்மன், கவுரிசங்கர், பாலமுருகர், வாசுகி நாகாலம்மன், துர்கா பரமேஸ்வரி, தித்யாதி நவகிரகங்கள் மற்றும் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது.

கோவில் நிலத்தில் கிரானைட் வெட்டி எடுப்பு பல கோடி ரூபாய் இழப்பு; அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 12, 2022 12:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் அருகே கோவில் நிலத்தில், தனியார் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, பல கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த நீலகிரி கிராமத்தின் மலை மீது, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மலை அடிவாரத்தில், 12 ஏக்கர், 5 சென்ட் கோவில் மானிய நிலம் உள்ளது. இதில், 75 சென்ட் நிலத்தில், தனியார் கிரானைட் நிறுவனம், சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, 4.25 ஏக்கர் நிலத்தில் கொட்டி வைத்திருப்பதாக, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம், திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் புகார் செய்தார்.

அதேபோல், கடந்த, 2005 முதல், சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக, உத்தனப்பள்ளி போலீசில் கடந்த ஜன., மாதம், ஹிந்து சமய அறநிலையத்துறை தேன்கனிக்கோட்டை பகுதி ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம், 28ல் கோவில் நிலத்தில் ஆய்வு செய்தார். அப்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில், பல கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி தலைமையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரங்கசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி ஆகியோர், சர்வேயர் கோவிந்தன் மூலம், கோவில் நிலத்தை நேற்று அளந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 75 சென்ட் நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதனால், தனியார் கிரானைட் நிறுவனம் மீது, மாவட்ட நிர்வாகம் அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் -தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

‘இடிக்கப்பட்ட அம்மணி அம்மாள் மடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jul 4, 2023, 10:21 PM IST

திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/hc-has-ordered-that-the-demolished-ammani-ammal-mutt-should-be-restored-in-thiruvannamalai/tamil-nadu20230704222122859859486

Etv Bharat

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபாபு. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஜவ்வாது மலை அருகே உள்ள சின்னசமுத்திரம் கிராமத்தில் பிறந்த அம்மணி அம்மாள் தனது பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இருந்து விலகி, துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொண்டார்.

பின்னர், திருவண்ணாமலைக்குச் சென்ற அம்மணி அம்மாள் தீர்க்க முடியாத பல நோய்களை "திருநீறு" கொடுத்து தீர்த்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஆலயத்திற்கு அருகே இருந்து தனது துறவு வாழ்க்கையை மேற்கொண்ட அம்மணி அம்மாள் கோயிலின் வடக்கு கோபுரத்தை மைசூர் மகாராஜா உதவியுடன் நன்கொடை மற்றும் யாசகத்தால் கிடைத்த பணத்தின் மூலம் நிதி திரட்டி கோபுரத்தை கட்டினார். இதனால் அந்த கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

கோபுரம் கட்டுவதற்கான பொருட்களைச் சேர்த்து வைக்க பயன்பட்ட 25ஆயிரத்து 247 சதுர அடி நிலத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும், சேவையும் வழங்கப்பட்டது. அம்மணி அம்மாள் நினைவாக செயல்பட்டு வந்த மடத்தை டி.ஏ வையாபுரிக்கு பிறகு அவரது குடும்பத்தினர் நிர்வாகிக்காததால், சின்னதம்பி பிள்ளை என்பவர் ஆக்கிரமித்து உரிமை கோரினார்.

இதை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த இடத்தை வையாபுரி குடும்பத்தினருடன் சேர்ந்து அறநிலையத்துறை நிர்வகிக்க உத்தரவிட்டது. ஆனால், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தவறியதால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக்கோரி 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல் 300 ஆண்டுகள் பழமையான அம்மணி அம்மாள் மடத்தை இடித்தனர். அதனால், இடிக்கப்பட்ட மடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில், ஆக்கிரமிப்பை இடிக்கும் பணிகள் நிருத்தப்பட்டுள்ளதாகவும், இடிக்கப்பட்ட மடத்தின் மற்ற பகுதிகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மட்டும் அகற்றாமல், பழமையான மடத்தையும் இடத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி அம்மணி அம்மாளின் நினைவுச்சின்னமான மடத்தை அதன் பழமை மாறாமல் விரைவில் புதுப்பிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...