புறநானூற்றில் புள்வடிவ வேள்வி
பலவகையான யாகங்கள் வேத இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று ச்யேன சிதி என வழங்கப்பெறும் யாகமாகும். இந்த வேள்வி க்ருஷ்ணயஜுர் வேதத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. சுல்ப ஸூத்ரங்கள் இதற்கான அளவைகளை வழங்குகின்றன. பருந்தின் வடிவில் குண்டங்களை அமைத்து புரியும் வேள்விதான் இது. விருப்பங்களை நிறைவேற்றும் காம்யார்த்த வேள்விகளுள் இதுவும் ஒன்று. இதற்கான குறிப்பை அழகாக புறநானூறுதான் வழங்குகிறது.
பருதி யுருவிற் பல்படைப் புசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்
என்னும் புறநானூற்று வரிகள் கருங்குழலாதனாருடையவை.
எருவை - பருந்தின் வடிவிலான யாகத்தில் யூப ஸ்தம்பங்களை நட்டு கரிகாற்பெருவளத்தான் வேத வேள்வி முடித்த செயலை இந்த வரிகள் குறிப்பிடுகின்றன.
தீ வளர்த்து அவி சொரிந்து வேள்வி வேட்டுவது என்பது ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே தமிழர்கள் செய்துவரும் வழிபாடு.
கரிகாற்பெருவளத்தான் பூதவுடல் நீங்கி புகழுடல் எய்திய போது சங்க புலவர் கருங்குளவாதனார் பெருவளத்தான் செய்த அளப்பரிய வேதவேள்விகளை பாடுகிறார்
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து பறப்பது போல செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்துடன் தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான்
சோமயாகம், அதிரத்ர யாகம், அஸ்வமேதம் யாகம் போன்றவைகளுக்கு பருந்து போல யாக குண்டமும் வேள்வித்தூணும் நட்டி அவி சொரிந்து வேள்வி வேட்டல் இன்றைக்கும் நடக்கிறது.
சமீபத்திலே கேரளாவிலே நடைபெற்ற 12 நாள் அதிரத்ரயாகத்தின் படம் இணைத்துள்ளேன்.
அந்த வேள்வி முடிவுறூம்போது யாகசாலை அக்னிக்கு படைக்கப்படும்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தை பற்றி அவ்வையார் பாடும் போது அவரின் முன்னோர் செய்த வேள்விகளை பற்றி சொல்கிறார்
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
அதியமான் அஞ்சியின் முன்னோர் என்னென்ன செய்தார்கள்?
தேவர்களை போற்றி வேள்வி நடத்தி ஆஹூதி அளித்தார்கள்.
கரும்பை விண்ணுலகிலே இருந்து கொண்டு வந்தார்கள்.
நீர் சூழ்ந்த இந்த உலகிலே ஆட்சி சக்கரத்தை நடத்தினார்கள்.
என அவ்வையார் புறம் 99 பாடலிலே பாடுகிறார்.
ராஜ்சூய வேள்வியை செய்ய அறிவுறுத்தப்பட்டு கங்கையும் இமயமும் கொண்ட சேரன் செங்குட்டுவன் ராஜசூய வேள்வியை செய்கீறார்
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுநற்காதை
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற,
நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச் செய்யும் அந்தணர் கொண்டு
அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த
நல்ல வேள்வியினை நீ செய்தல் வேண்டும்;
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
கழலினையணிந்த வேந்தன் நால்வேத முறையானே நாற்பொருளை ஆராய்ந்து கூறும் பல்வகை நூற்கேள்விகளையும் முடித்த வேள்வி செய்தற்குரிய அந்தணரை
மாடலனாகிய பார்ப்பான் கூறிய முறைமையானே
வேள்விச் சாந்தியாகிய விழாவினைச் செய்ய ஏவி
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.
கைத்தொழில் வல்லார் செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து அருச்சனை செய்து திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி
ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து
பிரதிட்டை செய்கவென்று ஏவினான் வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க.
எனவே வேத வழிபாடு ஆண்டாண்டு காலமாக பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்மண்ணிலே நடந்து கொண்டு வருவது தான்.
வேதக்கடவுள்களுக்கும் இப்போது இருக்கும் கடவுள்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வார்த்தை வியாபாரி சமீபத்திலே கூட் உளறியது.
வேதத்திலேயும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி அதே கடவுள்கள் தான் வணங்கப்படுகிறார்கள்.
அக்னி வளர்த்தித்தான் ஹோமம் செய்யப்படுகிறது. வருண மந்திரங்களால் இன்றைக்கும் மழை வேண்டப்படுகிறது.
ஈசனுக்கே எஞ்சிய எல்லா அவிர்ப்பாகமும் என வேதகாலத்திலே இருந்து இண்றைக்கு வரைக்கும் இருக்கிறது.
வேதத்திலே அக்னி மூலமாக இறைவனை அழைக்கும்போது இறைவனே அங்கு மந்திர ரூபமாக சூக்கும வடிவிலே எழுந்தருளி வேண்டும் வரங்களை அளிக்கிறான் என்பது தான் நம்பிக்கை.
அப்படி எழுந்தருளியை இறைவனை நீரிலோ, மரத்திலோல், உலோகத்திலோ, கல்லிலோ ஆன இருப்பிடத்திலே எழுந்தருள செய்து நிரந்தர வாசம் செய்வித்தால் அது கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் நாலாயிர ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையை கட்டப்பட்ட கோவில்களிலே வழிபாடு தொடர்கிறது.
ராமாயணத்திலே ராமர் திரும்பும் போது கோவில்களும் சுத்தப்படுத்தப்பட்ட செய்தி வருகிறது. கிருஷ்ணர் ருக்மிணீ தேவியை கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்த போதே அழைத்து செல்கிறார்.
எனவே இந்த இந்திரன் இப்போது வழிபாட்டிலே இல்லை, வாயு அக்னி வருணன் வழிபாட்டிலே இல்லை என்ற அடிமுட்டாள் தனமான வாதங்களை விடுத்து
தமிழ் மண்ணிலே தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் செய்யப்பட்டு வந்த வேத வேள்விகளை புரிந்து கொண்டு அறிந்து கொண்டு அவற்றை ஓதியும் ஓதுவித்தும் வேள்வி வேட்டலும் நற்பலனை தரும்.
No comments:
Post a Comment