திருக்குறள் இயற்றப்பட்ட அடுத்த நூற்றாண்டு எழுந்த முதல் உரை தமிழ் சமணர் மணக்குடவர் உரை. மணக்குடவர் திருவள்ளுவர் உலகை படைத்த ஆதிபகவன்-பரம்பொருள் எனும் பிரம்மத்தை குறிக்கிறார் என்று தான் தன்னுடைய உரையில் காட்டியுள்ளார் கல்வி கற்பதன் பயணி ஆதி பகவன் திருவடிகளை தொழுவதற்காகவே என்பது திருக்குறள் இறைவனை தன் தலையால் வணங்காதவன் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்பது திருவள்ளுவர் கூற்று.
திருக்குறளைத் திறனாய்வு செய்த பல்வேறு புலவர்களின் திருவள்ளுவமாலை இந்திய ஞான மரபு
எனும் வேத அதாவது அறிவு வழியில் அடிப்படையில் ஆன அந்தத் தொடர்ச்சி தான் என்கிறார். திருவள்ளுவரும் அதை நீத்தார் பெருமையில் உறுதி செய்கிறார் அந்தணர் நூல் பார்ப்பான் ஓத்து அருதொழிலாளர் நூல் என மிகத் தெளிவாக பல இடங்களில் கூறியுள்ளார்.
குறள் 725 அமைச்சர் அறிய வேண்டிய அளவை நூல்கள் என்பதற்கு மணக்குடவர் கொடுத்துள்ள உரை இது தான்.
தமிழ் மரபில் திருவள்ளுவர் எப்படி பார்க்கப்பட்டார் என்பதற்கு இரண்டு ஆதாரங்கள் ஒன்று பிற்கால அவ்வையின் பாட்டு இன்னொன்று 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருவள்ளுவர் சிலை என மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கிடைத்த சிலை இது இரண்டுமே அவரை ஒரு மகரிஷியாக பூனூலோடு திருநீர் அணிந்தவர் ஆக உள்ளார்.
ஆர்சிபிஷப் அருளப்பா, தேவநேயப்பாவாணர் கும்பல் மற்றும் திமுக அரசு ஒத்துழைப்போடு செய்த
திருக்குறளை கிறிஸ்தவம் ஆக்கும் முயற்சி என்பது இன்றுவரை தொடர்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 20க்கும் அதிகமான பி.ஹெச்டிகள். திருவள்ளுவர் சிலையை தோமோ சிலை போல வடிவில் திருச்சி ஒரு கிறிஸ்தவ பள்ளியில் வைத்து சாமுவேல் குணசீலன் எனும் பெங்களூர் குணா திறந்து வைத்தார் என்பதும் இணையத்தில் கிடைக்கும் இன்றுவரை திமுகவும் கிறிஸ்தவர்களும் திராவிடியார் நவீன புலவர்களும் திருக்குறளை சிறுமை செய்வது உங்கள் வழியை வழியாகவும் தொடர்கிறது
திருக்குறளுக்கு எழுதப்பட்ட காலம் முதல் 18ம் நூற்றாண்டு வரை அனைவருமே அது இந்திய மெய்யியல் மரபில் தான் கண்டனர். மதமாற்ற சக்திகள் அதில் உள்ள மிகச்சில குறட்பாக்களை காணப்படும் கருத்துக்களை மிகைப் படுத்தி சமணம் எனக் கூச்சல் அதிகமாயிற்று. அதற்கு மறுப்பு தந்தனர் நடுநிலை தமிழறிஞர்கள்.
காலணி ஆதிக்க மதமாற்ற சக்திகளின் அடிமைகளாக தமிழர் மரபிற்கு விரோதமான திராவிடியார் புலவர்கள் உரைகள் 20ம்நூற்றாண்டில் திருக்குறளை சிறுமை செய்கின்றன. குரங்கு கையில் கிடைத்த பூமாலை ஆக நவீன தமிழ் புலவர்கள் கையில் திருக்குறள் சிக்கித் தவிக்கிறது
சென்னை பல்கலைக் கழகத்தின் திருக்குறள் துறையில் 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய முனைவர். கு.மோகனராசு எங்குமே ஆர்ச் பிஷப் அருளப்பா & தேவநேயப்பாவாணர் கும்பலின் மோசடி வேலையை பதிவு செய்ததாக தெரியவில்லை அவர் தன்னுடைய கடைசி 6 ஆண்டு காலம் தமிழ் கிறிஸ்தவத்துறை தலைவராக பணியாற்ற, அப்பொழுது 'திருக்குறளுக்கு கிறித்தவர்கள் கொடை' என்ற நூலில் ஆர்ச் பிஷப் அருளப்பாவின் உரை பற்றி எழுதியுள்ளார தவிர அந்த உரையினல் வான் என்பது பரிசுத்த ஆவி போன்ற அருவருப்பான மோசடிகளை கூட காட்டவில்லை.
மோகனராசு வேத மெய்யியல் மரபு இறை ஞான நூல் திருக்குறள் என்பதை மறைக்க தன் தமிழ் புலமையால் எழுதி உள்ளவை- சேவல் கண்ணை
மூடிக்கொண்டு நான் சூரியன் உதிப்பதை தடுத்து விட்டேன் என்பது போல உள்ளது
No comments:
Post a Comment