திமுக அரசுசாங்கம் பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்து யார் பெயரில் தற்போது உள்ளது? அடமானம் உள்ளதா? முந்தைய பரிமாற்றம் - முன் ஆவணம் (டைட்டில் டீட்) என்று நாமே பார்த்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டது.
சொத்து வாங்கு நினைக்கும் எவரும் இணையம் மூலம் வில்லங்கம் வாங்கும் வசதியும் நீக்கப் பட்டுள்ளது, எல்லோரும் இனி வாங்க சார்பதிவாளர் அலுவலகம் நேரில் செல்ல வேண்டும்
இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 3-500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும்.
ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட் 40 செண்டாக இருந்தால் கூட இனி அவர் ஒரு அடமானப் பத்திரம் வங்கியில் வைப்பதாக இருந்தால் கூட 10 நெம்பருக்கும் வில்லங்க சான்று பெற ரூ. 5000/- செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.
பதிவுத் துறையில் நேர்முகமாக வில்லங்கச் சான்றிதள் தருவதன் செலவு மிக அதிகம், மற்றும் தேவையற்ற கூட்டம், மற்றும் இடைநிலை புரோக்கர்கள் தலையீடு மிகமிக அதிகமாகும். புரிதலிற்கு நீங்கள் வங்கியில் நேரிடையாகப் பணம் எடுக்க வங்கிக்கு ஒரு நபரின் பரிவர்த்தனைக்கு ரூ.150 வரை ஆகிறது, ஏடிஎம் மூலம் ரூ.25 தான் ஆகிறது. எனவே வங்கிகளில் ஏடிஎம் மூலம் எடுக்கவே ஊக்கம் தருகிறது.
இன்று வெளிப்படைத் தன்மை எல்லாவற்றிலும் என உள்ள நிலையில் இப்படி பூட்டி வைப்பது ஊழல் வளர்க்கும்; மற்றும் அரசியல்வாதிகளின் சட்ட விரோத பரிவர்த்தனை மறைக்க என்றே ஆகும்.
No comments:
Post a Comment