Sunday, September 8, 2024

பள்ளிகளில் மாணவர்கள் தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் சூழல் பாதுகாப்பு உறுதிமொழி சுற்றறிக்கை - வாபஸ்

 தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தமிழர் வணக்கம் என பள்ளி மாணவர்களிடம் அரசே கூறுவதாக உள்ளது என பல தமிழர் மெய்யியல் விரோத அன்னிய மத அடிமை கட்சிகள் தூண்ட வாபஸ் செய்தி

https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-govt-action-against-officials-for-sending-vinayagar-sathurthi-circular-to-schools/articleshow/113070093.cms

பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி சுற்றறிக்கை... தமிழக அரசு ரத்து செய்து நடவடிக்கை! 

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 4 Sep 2024, 9:21 pm

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று முதன்மை கல்வி அலுவலர்களால் அனுப்பப்பட்டது. இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை -மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தல் தவறாக அனுப்பப்பட்டுள்ளது; அலுவலர்கள் மீது பாயும் நடவடிக்கை

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகர பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் விநாயகர் சிலை தயாரிப்பு

யார் யாருக்கு பொருந்தும்

மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

சுற்றறிக்கை வெளியீடு

இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆனது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பாடு

இத்தகைய சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அறிவுறுத்தல்கள் ரத்து

இவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

துறை ரீதியான நடவடிக்கை

மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழகத்தில் இன்று காலை பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவர்களிடம் மத சாயம் பூசும் முயற்சி என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சுற்றறிக்கையை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Saturday, September 7, 2024

திருச்சி நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

 

 திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அரேபிய வழியான முஹம்மதிய நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

நாம் தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் திருச்சி தர்கா யார் பெயரால் எப்போது கட்டப் பட்டது என்பதைக் காண்போம்



நத்தர்ஷா வலி தர்கா
நத்தர் ஷா தர்கா என்பது திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான மசூதியாகும், இது சூஃபி அறிஞர் சுல்தான் சையத் பாபய்யா நத்தர் ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த தர்கா வளாகம், பிரதான மசூதி,  கூட்டு துவா மண்டபம், கல்லறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
சுல்தான் சையத் பாபய்யா  நத்தர் ஷாவின் நினைவு தினத்தை நினைவுகூரும் புகழ்பெற்ற வருடாந்திர உர்ஸ் திருவிழாவின் போது இந்த தர்காவில் கூட்டம் அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் தமிழக பல பகுதியிலிருந்து விசுவாசிகள் மத சடங்குகள், கவாலிகள் (சூஃபி பக்தி இசை) மற்றும் ஆறுதல் பெற தர்காவில் கூடுகிறார்கள். 

அபுல் ஹசன் நத்தர் என்றும் அழைக்கப்படும் நாதர் ஷா, 15 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி மற்றும் பிரபல சூஃபி குருவான க்வாஜா பண்டா நவாஸ் கெசுதராஸின் முக்கிய சீடர் ஆவார்.

நாதர் ஷா தனது ஆன்மீக விதியைத் தேடி இன்றைய பாகிஸ்தானில் உள்ள டெல்ஃபி என்ற நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தார். அவர் மணப்பாறையில் குடியேறினார், அங்கு அவர் அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் போதனைகளைப் போதிக்கத் தொடங்கினார். அவர் தியானம் செய்து ஆன்மீக ஞானம் பெற்ற இடம் இப்போது  நத்தர் ஷா தர்காவின் தாயகமாக உள்ளது.

Wednesday, September 4, 2024

கரிகால் சோழன் செய்த வேதவேள்வி புறநானூறு 224

 புறநானூற்றில் புள்வடிவ வேள்வி

பலவகையான யாகங்கள் வேத இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று ச்யேன சிதி என வழங்கப்பெறும் யாகமாகும். இந்த வேள்வி க்ருஷ்ணயஜுர் வேதத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. சுல்ப ஸூத்ரங்கள் இதற்கான அளவைகளை வழங்குகின்றன. பருந்தின் வடிவில் குண்டங்களை அமைத்து புரியும் வேள்விதான் இது. விருப்பங்களை நிறைவேற்றும் காம்யார்த்த வேள்விகளுள் இதுவும் ஒன்று. இதற்கான குறிப்பை அழகாக புறநானூறுதான் வழங்குகிறது.

 பருதி யுருவிற் பல்படைப் புசை

 எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

 வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்

என்னும் புறநானூற்று வரிகள் கருங்குழலாதனாருடையவை.

எருவை - பருந்தின் வடிவிலான யாகத்தில் யூப ஸ்தம்பங்களை நட்டு கரிகாற்பெருவளத்தான் வேத வேள்வி முடித்த செயலை இந்த வரிகள் குறிப்பிடுகின்றன.

தீ வளர்த்து அவி சொரிந்து வேள்வி வேட்டுவது என்பது ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே தமிழர்கள் செய்துவரும் வழிபாடு.

கரிகாற்பெருவளத்தான் பூதவுடல் நீங்கி புகழுடல் எய்திய போது சங்க புலவர் கருங்குளவாதனார் பெருவளத்தான் செய்த அளப்பரிய வேதவேள்விகளை பாடுகிறார்
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
பாடல் புறநானூறு 224
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து பறப்பது போல செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்துடன் தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான்
சோமயாகம், அதிரத்ர யாகம், அஸ்வமேதம் யாகம் போன்றவைகளுக்கு பருந்து போல யாக குண்டமும் வேள்வித்தூணும் நட்டி அவி சொரிந்து வேள்வி வேட்டல் இன்றைக்கும் நடக்கிறது.
சமீபத்திலே கேரளாவிலே நடைபெற்ற 12 நாள் அதிரத்ரயாகத்தின் படம் இணைத்துள்ளேன்.
அந்த வேள்வி முடிவுறூம்போது யாகசாலை அக்னிக்கு படைக்கப்படும்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தை பற்றி அவ்வையார் பாடும் போது அவரின் முன்னோர் செய்த வேள்விகளை பற்றி சொல்கிறார்
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
அதியமான் அஞ்சியின் முன்னோர் என்னென்ன செய்தார்கள்?
தேவர்களை போற்றி வேள்வி நடத்தி ஆஹூதி அளித்தார்கள்.
கரும்பை விண்ணுலகிலே இருந்து கொண்டு வந்தார்கள்.
நீர் சூழ்ந்த இந்த உலகிலே ஆட்சி சக்கரத்தை நடத்தினார்கள்.
என அவ்வையார் புறம் 99 பாடலிலே பாடுகிறார்.
ராஜ்சூய வேள்வியை செய்ய அறிவுறுத்தப்பட்டு கங்கையும் இமயமும் கொண்ட சேரன் செங்குட்டுவன் ராஜசூய வேள்வியை செய்கீறார்
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுநற்காதை
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற,
நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச் செய்யும் அந்தணர் கொண்டு
அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த
நல்ல வேள்வியினை நீ செய்தல் வேண்டும்;
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
கழலினையணிந்த வேந்தன் நால்வேத முறையானே நாற்பொருளை ஆராய்ந்து கூறும் பல்வகை நூற்கேள்விகளையும் முடித்த வேள்வி செய்தற்குரிய அந்தணரை
மாடலனாகிய பார்ப்பான் கூறிய முறைமையானே
வேள்விச் சாந்தியாகிய விழாவினைச் செய்ய ஏவி
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.
கைத்தொழில் வல்லார் செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து அருச்சனை செய்து திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி
ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து
பிரதிட்டை செய்கவென்று ஏவினான் வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க.
எனவே வேத வழிபாடு ஆண்டாண்டு காலமாக பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்மண்ணிலே நடந்து கொண்டு வருவது தான்.
வேதக்கடவுள்களுக்கும் இப்போது இருக்கும் கடவுள்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வார்த்தை வியாபாரி சமீபத்திலே கூட் உளறியது.
வேதத்திலேயும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி அதே கடவுள்கள் தான் வணங்கப்படுகிறார்கள்.
அக்னி வளர்த்தித்தான் ஹோமம் செய்யப்படுகிறது. வருண மந்திரங்களால் இன்றைக்கும் மழை வேண்டப்படுகிறது.
ஈசனுக்கே எஞ்சிய எல்லா அவிர்ப்பாகமும் என வேதகாலத்திலே இருந்து இண்றைக்கு வரைக்கும் இருக்கிறது.
வேதத்திலே அக்னி மூலமாக இறைவனை அழைக்கும்போது இறைவனே அங்கு மந்திர ரூபமாக சூக்கும வடிவிலே எழுந்தருளி வேண்டும் வரங்களை அளிக்கிறான் என்பது தான் நம்பிக்கை.
அப்படி எழுந்தருளியை இறைவனை நீரிலோ, மரத்திலோல், உலோகத்திலோ, கல்லிலோ ஆன இருப்பிடத்திலே எழுந்தருள செய்து நிரந்தர வாசம் செய்வித்தால் அது கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் நாலாயிர ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையை கட்டப்பட்ட கோவில்களிலே வழிபாடு தொடர்கிறது.
ராமாயணத்திலே ராமர் திரும்பும் போது கோவில்களும் சுத்தப்படுத்தப்பட்ட செய்தி வருகிறது. கிருஷ்ணர் ருக்மிணீ தேவியை கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்த போதே அழைத்து செல்கிறார்.
எனவே இந்த இந்திரன் இப்போது வழிபாட்டிலே இல்லை, வாயு அக்னி வருணன் வழிபாட்டிலே இல்லை என்ற அடிமுட்டாள் தனமான வாதங்களை விடுத்து
தமிழ் மண்ணிலே தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் செய்யப்பட்டு வந்த வேத வேள்விகளை புரிந்து கொண்டு அறிந்து கொண்டு அவற்றை ஓதியும் ஓதுவித்தும் வேள்வி வேட்டலும் நற்பலனை தரும்.

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...