அதிசய செய்திகள் நிறைந்த கலித்தொகை உரைப் பதிப்பு.
நண்பர்களே….
நச்சினார்கினியர் கலித்தொகைக்கு எழுதிய உரையில் முதல்பாடலாகிய கடவுள் வாழ்த்தில் வருகின்ற வேதம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுகையில், ருக், யஜீர், சாமம், அதர்வணம் என்பன முழுமையான வேதங்கள் அல்ல. சுருக்கப்பட்டவை. தைத்ரியம், தலவகாரம், பௌழியம், சாமவேதம் என்பவைதான் முழுமையான வேதங்கள் என்று கூறி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறார்.
மருதக்கலி 18ம் பாடல் உரையில் பிள்ளையார் என்றால் முருகன் தான் என்று அசத்துகிறார். “நன்றே” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.
அப்படியான பாடல் இப்பொழுதுள்ள குறுந்தொகை நூல்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான அதிர்வூட்டும் உரைக் குறிப்புகளை மிக அற்புதமான அரிய மேற்கோள்கள் 4000 க்கு மேற்பட்டதைக் கொடுத்து தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் வாசகர்களுக்கு விரிவாக உணர்த்துகின்றார் பதிப்பாசிரியர் இ.வை.அனந்தராமையர்.
No comments:
Post a Comment