பொ வேல்சாமி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் திருடுவாரா…? ஆம் திருடுவார் என்கிறது இந்தப் பதிவு.
நண்பர்களே…..
சனவரி – பிப்ரவரி 2004 கவிதாசரண் இதழில் வெளிவந்த ஒரு பதிவில் அன்றைய மலையாள மனோரமா இதழில் தமிழ்ப் பல்கலைக் கழக இசைப் பேராசிரியர் டாக்டர் அங்கயற்கண்ணி அவர்கள் எழுதிய “காலந்தோறும் தமிழிசை” என்ற கட்டுரையை ஜெயமோகன் முழுமையாகத் திருடி தான் நடத்தி வந்த “சொல்புதிது“ இதழில் ”தமிழிசை - ஒரு பின்னோக்கிய பார்வை” என்று பெயரையும் கொடுத்து தன் மனைவி பெயரில் வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய திருட்டுத்தனத்தை என்றுமே தன் மீது நம்பிக்கைக் கொண்ட ரசிக சிகாமணிகள் கண்டுபிடிக்க திராணியற்றவர்கள் என்ற மிதப்பில் வெளியிட்டு விட்டார். அவருடைய இந்த எண்ணத்தைப் பொய்யாக்கி கவிதாசரணில் வெளிவந்த ”ஜெயமோகனின் ஒரு திருட்டு – ஒரு சான்றாதாரம்” என்ற சென்றகாலப் பதிவை உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். அந்தப் பதிவைத் தாங்கி வந்த கவிதாசரண் இதழை நீங்கள் கண்ணில் காண்பதற்கு உதவியாக இந்த இதழின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
https://www.padippakam.com/padippakam/document/Kavithaasaran/2004/Kavithaasaran_02_2004.pdf



No comments:
Post a Comment