பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா
கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு
ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின்
நிலையைப் பாருங்கள்.
சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர்
காலமில்லை. திருமலைநாயக்கர்
1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள்.
அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன
ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது. ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு.
ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு
இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும்
ஒவ்வாத செயல். இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு. இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் மடத்தனத்தின் உச்சமன்னியில்
வேறில்லை.
This claim is based on a Copper Plate of later date, leaving aside very clear Stone inscriptios of earlier date , as per Prof.Sankara Narayanan (Thirupathi Central University).
Professor FB Post link and reproduced here
https://www.facebook.com/718812498/posts/10158735237817499/
I quote from Justice
Maharajan Report on Palani Temple Now have Sivachariars doing Pooja but it was
having Non Brahmion Pandara Pooja and was changed in 17th century
under Nayakkar Rule.
Page 31 Para -6
Again repeated in Para
– 4 of Page -40
பழநியில் 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு: கோயிலில் நித்ய பூஜை செய்ய எழுதிக் கொடுத்தது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் நித்ய பூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பருக்கு எழுதிக் கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆய்வு செய்தனர். இது குறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது:
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினரால் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்ய பூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சனக் குடம் எடுத்து 120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி ஆகியவற்றால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்குக் கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு ரூ.115 கூலியாக வழங்கத் தீர்மானித்து எழுதப்பட்டுள்ளது.
இந்த செப்பேடு 1868-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகள் முந்தைய இந்த செப்பேடு 25 செ.மீ. அகலம், 45 செ.மீ. உயரம், 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. செப்பேட்டில் வேல், சூரியன், சந்திரன் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவமயம் தண்டாயுதபாணி துணை எனத் தொடங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் செப்பேட்டில் உள்ளன. இந்த செப்பேட்டின்படி தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்ய அறை, மடத்தை பயன்படுத்திக் கொள்ள கந்தசாமி பண்டாரத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை, சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
கந்தசாமி பண்டாரத்தின் ஐந்தாவது தலைமுறையினரான பரமேஸ்வரன் என்பவரிடம் செப்பேடு தற்போது உள்ளது. ஆய்வின்போது தொல்லியல் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்