Sunday, September 8, 2024

பள்ளிகளில் மாணவர்கள் தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் சூழல் பாதுகாப்பு உறுதிமொழி சுற்றறிக்கை - வாபஸ்

 தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தமிழர் வணக்கம் என பள்ளி மாணவர்களிடம் அரசே கூறுவதாக உள்ளது என பல தமிழர் மெய்யியல் விரோத அன்னிய மத அடிமை கட்சிகள் தூண்ட வாபஸ் செய்தி

https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-govt-action-against-officials-for-sending-vinayagar-sathurthi-circular-to-schools/articleshow/113070093.cms

பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி சுற்றறிக்கை... தமிழக அரசு ரத்து செய்து நடவடிக்கை! 

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 4 Sep 2024, 9:21 pm

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று முதன்மை கல்வி அலுவலர்களால் அனுப்பப்பட்டது. இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை -மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தல் தவறாக அனுப்பப்பட்டுள்ளது; அலுவலர்கள் மீது பாயும் நடவடிக்கை

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகர பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் விநாயகர் சிலை தயாரிப்பு

யார் யாருக்கு பொருந்தும்

மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

சுற்றறிக்கை வெளியீடு

இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆனது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பாடு

இத்தகைய சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அறிவுறுத்தல்கள் ரத்து

இவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

துறை ரீதியான நடவடிக்கை

மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழகத்தில் இன்று காலை பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவர்களிடம் மத சாயம் பூசும் முயற்சி என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சுற்றறிக்கையை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Saturday, September 7, 2024

திருச்சி நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

 

 திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அரேபிய வழியான முஹம்மதிய நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?

நாம் தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் திருச்சி தர்கா யார் பெயரால் எப்போது கட்டப் பட்டது என்பதைக் காண்போம்



நத்தர்ஷா வலி தர்கா
நத்தர் ஷா தர்கா என்பது திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான மசூதியாகும், இது சூஃபி அறிஞர் சுல்தான் சையத் பாபய்யா நத்தர் ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த தர்கா வளாகம், பிரதான மசூதி,  கூட்டு துவா மண்டபம், கல்லறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
சுல்தான் சையத் பாபய்யா  நத்தர் ஷாவின் நினைவு தினத்தை நினைவுகூரும் புகழ்பெற்ற வருடாந்திர உர்ஸ் திருவிழாவின் போது இந்த தர்காவில் கூட்டம் அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் தமிழக பல பகுதியிலிருந்து விசுவாசிகள் மத சடங்குகள், கவாலிகள் (சூஃபி பக்தி இசை) மற்றும் ஆறுதல் பெற தர்காவில் கூடுகிறார்கள். 

அபுல் ஹசன் நத்தர் என்றும் அழைக்கப்படும் நாதர் ஷா, 15 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி மற்றும் பிரபல சூஃபி குருவான க்வாஜா பண்டா நவாஸ் கெசுதராஸின் முக்கிய சீடர் ஆவார்.

நாதர் ஷா தனது ஆன்மீக விதியைத் தேடி இன்றைய பாகிஸ்தானில் உள்ள டெல்ஃபி என்ற நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தார். அவர் மணப்பாறையில் குடியேறினார், அங்கு அவர் அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் போதனைகளைப் போதிக்கத் தொடங்கினார். அவர் தியானம் செய்து ஆன்மீக ஞானம் பெற்ற இடம் இப்போது  நத்தர் ஷா தர்காவின் தாயகமாக உள்ளது.

Wednesday, September 4, 2024

கரிகால் சோழன் செய்த வேதவேள்வி புறநானூறு 224

 புறநானூற்றில் புள்வடிவ வேள்வி

பலவகையான யாகங்கள் வேத இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று ச்யேன சிதி என வழங்கப்பெறும் யாகமாகும். இந்த வேள்வி க்ருஷ்ணயஜுர் வேதத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. சுல்ப ஸூத்ரங்கள் இதற்கான அளவைகளை வழங்குகின்றன. பருந்தின் வடிவில் குண்டங்களை அமைத்து புரியும் வேள்விதான் இது. விருப்பங்களை நிறைவேற்றும் காம்யார்த்த வேள்விகளுள் இதுவும் ஒன்று. இதற்கான குறிப்பை அழகாக புறநானூறுதான் வழங்குகிறது.

 பருதி யுருவிற் பல்படைப் புசை

 எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

 வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்

என்னும் புறநானூற்று வரிகள் கருங்குழலாதனாருடையவை.

எருவை - பருந்தின் வடிவிலான யாகத்தில் யூப ஸ்தம்பங்களை நட்டு கரிகாற்பெருவளத்தான் வேத வேள்வி முடித்த செயலை இந்த வரிகள் குறிப்பிடுகின்றன.

தீ வளர்த்து அவி சொரிந்து வேள்வி வேட்டுவது என்பது ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே தமிழர்கள் செய்துவரும் வழிபாடு.

கரிகாற்பெருவளத்தான் பூதவுடல் நீங்கி புகழுடல் எய்திய போது சங்க புலவர் கருங்குளவாதனார் பெருவளத்தான் செய்த அளப்பரிய வேதவேள்விகளை பாடுகிறார்
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
பாடல் புறநானூறு 224
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து பறப்பது போல செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்துடன் தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான்
சோமயாகம், அதிரத்ர யாகம், அஸ்வமேதம் யாகம் போன்றவைகளுக்கு பருந்து போல யாக குண்டமும் வேள்வித்தூணும் நட்டி அவி சொரிந்து வேள்வி வேட்டல் இன்றைக்கும் நடக்கிறது.
சமீபத்திலே கேரளாவிலே நடைபெற்ற 12 நாள் அதிரத்ரயாகத்தின் படம் இணைத்துள்ளேன்.
அந்த வேள்வி முடிவுறூம்போது யாகசாலை அக்னிக்கு படைக்கப்படும்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தை பற்றி அவ்வையார் பாடும் போது அவரின் முன்னோர் செய்த வேள்விகளை பற்றி சொல்கிறார்
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
அதியமான் அஞ்சியின் முன்னோர் என்னென்ன செய்தார்கள்?
தேவர்களை போற்றி வேள்வி நடத்தி ஆஹூதி அளித்தார்கள்.
கரும்பை விண்ணுலகிலே இருந்து கொண்டு வந்தார்கள்.
நீர் சூழ்ந்த இந்த உலகிலே ஆட்சி சக்கரத்தை நடத்தினார்கள்.
என அவ்வையார் புறம் 99 பாடலிலே பாடுகிறார்.
ராஜ்சூய வேள்வியை செய்ய அறிவுறுத்தப்பட்டு கங்கையும் இமயமும் கொண்ட சேரன் செங்குட்டுவன் ராஜசூய வேள்வியை செய்கீறார்
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுநற்காதை
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற,
நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச் செய்யும் அந்தணர் கொண்டு
அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த
நல்ல வேள்வியினை நீ செய்தல் வேண்டும்;
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
கழலினையணிந்த வேந்தன் நால்வேத முறையானே நாற்பொருளை ஆராய்ந்து கூறும் பல்வகை நூற்கேள்விகளையும் முடித்த வேள்வி செய்தற்குரிய அந்தணரை
மாடலனாகிய பார்ப்பான் கூறிய முறைமையானே
வேள்விச் சாந்தியாகிய விழாவினைச் செய்ய ஏவி
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.
கைத்தொழில் வல்லார் செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து அருச்சனை செய்து திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி
ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து
பிரதிட்டை செய்கவென்று ஏவினான் வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க.
எனவே வேத வழிபாடு ஆண்டாண்டு காலமாக பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்மண்ணிலே நடந்து கொண்டு வருவது தான்.
வேதக்கடவுள்களுக்கும் இப்போது இருக்கும் கடவுள்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வார்த்தை வியாபாரி சமீபத்திலே கூட் உளறியது.
வேதத்திலேயும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி அதே கடவுள்கள் தான் வணங்கப்படுகிறார்கள்.
அக்னி வளர்த்தித்தான் ஹோமம் செய்யப்படுகிறது. வருண மந்திரங்களால் இன்றைக்கும் மழை வேண்டப்படுகிறது.
ஈசனுக்கே எஞ்சிய எல்லா அவிர்ப்பாகமும் என வேதகாலத்திலே இருந்து இண்றைக்கு வரைக்கும் இருக்கிறது.
வேதத்திலே அக்னி மூலமாக இறைவனை அழைக்கும்போது இறைவனே அங்கு மந்திர ரூபமாக சூக்கும வடிவிலே எழுந்தருளி வேண்டும் வரங்களை அளிக்கிறான் என்பது தான் நம்பிக்கை.
அப்படி எழுந்தருளியை இறைவனை நீரிலோ, மரத்திலோல், உலோகத்திலோ, கல்லிலோ ஆன இருப்பிடத்திலே எழுந்தருள செய்து நிரந்தர வாசம் செய்வித்தால் அது கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் நாலாயிர ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையை கட்டப்பட்ட கோவில்களிலே வழிபாடு தொடர்கிறது.
ராமாயணத்திலே ராமர் திரும்பும் போது கோவில்களும் சுத்தப்படுத்தப்பட்ட செய்தி வருகிறது. கிருஷ்ணர் ருக்மிணீ தேவியை கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்த போதே அழைத்து செல்கிறார்.
எனவே இந்த இந்திரன் இப்போது வழிபாட்டிலே இல்லை, வாயு அக்னி வருணன் வழிபாட்டிலே இல்லை என்ற அடிமுட்டாள் தனமான வாதங்களை விடுத்து
தமிழ் மண்ணிலே தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் செய்யப்பட்டு வந்த வேத வேள்விகளை புரிந்து கொண்டு அறிந்து கொண்டு அவற்றை ஓதியும் ஓதுவித்தும் வேள்வி வேட்டலும் நற்பலனை தரும்.

Thursday, August 29, 2024

பழனி- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு -பின்னணி அரசியலும்

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடந்து முடிந்தது, இதனை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பெயரில் நடத்தப்பட்டது. 

நிதி - செலவு கணக்கு : இம்மாநாட்டிற்கான செலவு பற்றிய கோரிக்கைகளை துறை பதில் தராமால் மறுத்துள்ளது. வலைத் தள ஊடகத்தில் பெறும் தொகை தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வசூல் செய்தமை ப்ற்றி கூறுகின்றன.  நிதி ஆதாரம் செலவு

ஆய்வுக் கட்டுரைகள்: உலகம் முழுவதும் உள்ள ஆய்வு அறிஞர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் வந்ததில் 100க்கும் அதிகமானோர் நேரில் வந்து தன் கட்டுரையை படித்து விளக்கினராம்.                                            ஆய்வுக் கட்டுரை என்பவை - எவ்விதத்திலும் முருகருக்கு பெருமை சேர்க்கவோ, பக்தியை வளப்பதோ இல்லை.

 தமிழக அரசு இடம் - நிதி உதவி மற்றும் ஜப்பானியர் நிதி உதவியுடன் இயங்கும் ஆசியவியல் நிறுவனம் 3 உலக முருகர் மாநாடு நடத்தியது. அதன் இயக்குனர் ஜான் சாமுவேல் (ஊழல் புகாரில் ஜெயில் தண்டனை பெற்று ஜாமினில் உள்ளவர்) சென்னை, மொரிஷியஸ் & மலேசியா என பெரும் தொகை வசூல் செய்து மாநாடு நடத்தியவர் முருகனை ஏற்காது அன்னிய மதம் பரப்புபவராகத் தான் உள்ளார். இவர் மாநாட்டில் விஜி,சந்தோஷத்தோடு சேர்ந்து கீழ்த்தரமாக பைபிள் இலவாசமாகத் தந்ததும் கலந்தவர் பதிவு செய்து உள்ளனர்.  பழைய மாநாட்டில் அலெக்சாண்டர் பற்றிய கவர்ச்சி கதைகளை முருகர் பற்றி புராணங்கள் உருவாகின எனவும் கட்டுரை படிக்கப்பட்டதை ஊழல்-ஜான் சாமுவேல் பேசி உள்ளார்.. 




இந்த ஜான் சாமுவேல் - திருக்குறளை மதவெறியோடு கிறிஸ்துவ நூல் என முனைவர் பட்டம் பெற்ற (பிஹெச்டி) உலக தமிழாராய்ச்சி நிறுவனமே அதை தரக்குறைவான மதமாற்ற மலின ஆய்வு என அறிவித்தது) மோசடி மு.தெய்வநாயகத்தோடு இணைந்து உலக தமிழ் கிறிஸ்துவ மாநாடு நடத்தியது அடுத்த பித்தலாட்டம். இதன் இறுதியாக முருகரை கடவுள் ஆக்கி மாற்றியதன் காரனம் ஏசு சீடர் தோமா மூலம் ஏசு கதையை தழுவி முருகரை சிவ குமாரன் என ஆக்கினர் என ஏடு பதிவு செய்தனர், அதை நூலாக  பதிப்பிக்க சிஎஸ் ஐ சர்ச் உதவியும் செய்தது.   







தமிழர் விரோத அன்னிய மத புரோக்கர்கள் முன்பே- ஆசியவியல் நிறுவனம் என்ற சமூக விரோத அமைப்பு மூலம் 3 அகில உலக ஸ்கந்தர் -முருகர் மாநாடு என நடத்தி- அதில் கிரேக்க அலெக்சாண்டர் ரோமான்ஸ் எனும் நவீனப் புனையல்களைத் தழுவியே ஸ்கந்தர் -முருகர் வழிபாடு வந்தது என்றே கட்டுரைகள் வந்துள்ளன.
இதை வைத்து சி.எஸ்.ஐ சர்ச் தமிழரிடம் பிடுங்கிய காசில்- " குமரக் கடவுளும்- குமாரக் கடவுளும்" என ஏசு கதை தழுவியே முருகர் வழிபாடு என மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் M.Phill வழங்கப்பட்டு உள்ளதே
https://christianityindia.wordpress.com/2011/01/21/john-samuel-institute-of-asian-studies-thomas-myth/

               நாம் உணர்வது முருகர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்- முருகர் வழிபாட்டை கெடுக்கவே என்பது வரலாறாக உள்ளது. சங்க இலக்கியத்தில் முருகர் பற்றி உள்ளவை சம்ஸ்கிருத இலக்கியம் தழுவியே என்பதை அறிஞர் ஏற்கின்றனர்.

மாநாட்டில் தமிழக முதல்வரோ - அவர் மகன் உதய்நிதி ஸ்டாலினோ நேரில் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பேச்சாளர் அனைவரும் இருவர் துதி பாடியதே அதிகம். உணவு ஏற்பாட்டு குழப்பம் பற்றி கலந்து கொண்டவர் காணொளிகள் வைரல் ஆனது.

  திமுக கட்சி என்பது கிறிஸ்துவ விஷநரிகள் மூலம் பதவி பெற்று அடிமைகளாக கொள்ளை அடித்து வளர்ந்த நீதிக் கட்சி மாற்று வடிவமே.  உதயநிதி ஸ்டாலின் தான் கிறிஸ்துவர் தன் மனைவி கிறிஸ்துவர் என்பதை அறிந்தால் தமிழர் வயிறு எரிவர் என கிறிஸ்துமஸ் மதவிழாவில் கலந்து பேசினார்.  ஆனால் அங்கே நானும் தன் மனைவி( பேராயர் பேத்தி) இருவரும் //பைபிள் கதைகளையோ -ஏசுவையோ ஏற்காத நாத்தீகர் எனப் பேசவில்லை//, ஆனல் தமிழரிடம் இந்து மதம் பற்றி கீழ்த்தரமாக நடப்பது ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி, தந்தை ஸ்டாலின் என அவை நாகரீகம் இல்லாது பிளவு, வெறுப்பு பேச்சு செய்வதை வழமையாகக் கொண்டு உள்ளார். 

மாநாடு வழக்கில் காப்பாற்றிக் கொள்ளவா?

உதயநிதி ஸ்டாலின் - இடதுசாரி சேர்ந்த ஒரு எழுத்தாளர் கும்பல் பிற்போக்குத்தனமாக நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கல்ந்துகொண்டார். உதய்நிதி பேச்சு அருவருக்கத்தக்க முறையிலும், சட்ட விரோதமாகவும் இருந்தது என்பதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்று வரை போலீஸ் செய்யவில்லை. ஆனால் உதயநிதியைக் காப்பாற்ற இம்மாநாடு எனப் படுகிறது

 
உதயநிதி 2013 தன் படப்பிடிப்பு போது கதாநாயகியோடு சென்று பழனி முருகனை வழிபட்டும் உள்ளார். ஆனால் அரசியலில் நுழைந்த பின்னர் திமுக சர்ச் கொத்தமைஅயாக நாசியக் கொளைகையாளர் எனக் காட்ட நேரடியாக போகவும் இல்லை. இதை வழக்கின் போது வழக்கறிஞர்கள் காட்டி தண்டனை வாங்கித் தர வேண்டும்

 

கண்காட்சி: மலை வடிவில் அரங்கம் அமைக்கப் பட்டு, அதனுள் அறுபடை வீடு கோயில்களில் மூலவர், முருகனின் பெருமைகளை கூறும் புகைப்பட கண்காட்சி, புத்தக விற்பனையகம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் 3-டி (அங்கு 3டியில் முருகனின் பாடலையும், விர்ச்சுவல் ரியாலிட்டியில் அறுபடை வீடுகளையும்) திரையரங்கம் மற்றும் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அரங்கம் இடம் பெற்றிருந்தவை மக்கள் பார்க்க மேலும் 5 நாட்கள் நீட்டித்து உள்ளனர்.




சங்க இலக்கியமும் தொல்காப்பியமும்


  சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் 

பண்டைத் தமிழர் வாழ்வியலைக் காட்டும் தொன்மையான நூல்கள் சங்க இலக்கியம் எனும் பாட்டுத்தொகை நூல்கள். இவற்றின் காலம் குறிக்கவும் வரலாற்றுத் தன்மை உறுதி செய்யவும் தொல்லியல்   ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதவின. 

சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் 

பண்டைத் தமிழர் வாழ்வியலைக் காட்டும் தொன்மையான நூல்கள் சங்க இலக்கியம் எனும் பாட்டுத்தொகை நூல்கள். இவற்றின் காலம் குறிக்கவும் வரலாற்றுத் தன்மை உறுதி செய்யவும் தொல்லியல்   ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதவின.     




  கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்                                

  கடுங்கோன் மகன் ளங்                                                     

  கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்

தஞ்சாவூர் பல்கலைக் கழக துணை வேந்தரும் புகழூர் வேலாயுதம் பாளையத்தில் உள்ள ஆறுநாட்டு மலை கல்வெட்டின் முக்கியத்துவத்தை "சங்க கால அரச வரலாறு" அணிந்துரையில் கூறி உள்ளார்

பண்டைத் தமிழர் வாழ்வியலைக் காட்டும் தொன்மையான நூல்கள் சங்க இலக்கியம் எனும் பாட்டுத்தொகை நூல்கள். இவற்றின் காலம் குறிக்கவும் வரலாற்றுத் தன்மை உறுதி செய்யவும் தொல்லியல்   ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதவின. செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.

இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்கு உரிய தலைவர்களாக தமிழ் அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. 


இந்தக் கல்வெட்டு மற்றும் இந்த 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' பிறகு ஆட்சி செய்த 12 தலைமுறை சேர மன்னர்கள் என சங்க இலக்கிய காலம் என்பது பொமு.50 முதல் பொஅ600 வரை என்பதை உறுதி செய்யும்


சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் 



Tuesday, August 27, 2024

சோழர்கள் கால இலவச மருத்துவ மனைகள்

 

இங்கு அவ்வப்போது நமது #பேரரசர்கள் #கோயில் கட்டினார்கள் அண்டை நாட்டை படையெடுத்து சென்றார்களே அன்றி #மருத்துவமனை கட்டினார்களா? #கல்வி நிலையங்கள் கட்டினார்களா என்ற கேள்வியுடன் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகே நாம் முறையான கல்வியும் மருத்துவமும் பெற்றோம் என்ற வாதங்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன...!

இதற்கு பதில் கூறுவதாகவே உள்ளது இப்பதிவு😊
சோழர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் இருந்ததும், அதுவும் இலவச மருத்துவ மனைகள் இருந்ததையும் கல்வெட்டுச்செய்திகள் நமக்கு தருகின்றன....!
இராஜராஜ சோழன் காலத்தில் அவரது சகோதரி குந்தவை பிராட்டியாரால் இலவச மருத்துவமனை சிறப்பாக செயல்பட்ட செய்தியை பாபநாசம் வட்டம் இராஜகிரிக்கு அருகிலுள்ள கோயில் #தேவராயன்பேட்டை_சிவாலய_சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது..!
இம்மருத்துவமனைக்கு #சுந்தர_சோழ_விண்ணக_ஆதுலசாலை என்ற பெயர் இருந்ததை அந்த சிவாலய சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது. குந்தவை தனது தந்தையின் நினைவாக இந்த இலவச மருத்துவமனையை தோற்றுவித்துள்ளார்...!
கிபி 1015ல் எழுதப்பட்ட இந்த சாஸனம் சுந்தர் சோழ விண்ணக ஆதுலசாலைக்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தியும் இதை குந்தவை பிராட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற செய்தியையும் தருகிறது....!
அடுத்ததாக சாசனம் கிபி 1018 ஆம் ஆண்டான இராஜேந்திர சோழனின் 7ஆம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதாவது தஞ்சை மருத்துவமனைக்கு "வைத்ய போகமாக" முன்பு அளித்த நன்கொடை போதாதென்று நினைத்த குந்தவை பிராட்டியார் இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்திடமிருந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அளித்த தகவலை தருகிறது. இச்செய்தியை கல்வெட்டாக பொறிக்க குந்தவை பிராட்டியாரே ஆணையிட்டதாக அந்த கல்வெட்டு செய்தியே சொல்கிறது.....!
ஆதுலசாலை அல்லது ஆதுரசாலை என்பது நோய்வாய்ப்பட்டோர் சிகிச்சை பெறும் இடமாகும். இங்கு மருந்துகள் அளிப்பதோடு #சல்லியகிரியை எனும் அறுவை சிகிச்சை முறைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சோழர்காலத்தில் திருமால் கோயில்களில் ஆதுலசாலைகள் இயங்கி வந்த செய்தியை திருமுக்கூடல் எனும் ஊரிலுள்ள வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு செய்தி ஊர்ஜிதமாக்குகிறது....!
வீரராஜேந்திரன் கிபி1063 முதல் 1070 வரை சோழ மண்டலத்தை ஆட்சி செய்தவராவார். இவர் #திரிமுக்கூடலில் இருந்த மருத்துவமனைக்கு அளித்த அறக்கட்டளை பற்றி இந்த சாசனம் விளக்குகிறது👇👇👇
அதாவது திரிமுக்கூடல் விஷ்ணு ஆலயத்தில் இருந்த ஜனநாத மண்டபத்தில் ஒரு பள்ளியும் ஒரு ஆதுல சாலையும், மாணவர்கள் தங்குவதற்கு ஒரு விடுதியும் இவ்வறக்கட்டளையால் செயல்பட்டன. இவ்வாறு அம்மண்டபத்தில் செயல்பட்ட மருத்துவமனைக்கு #வீரசோழ_ஆதுலசாலை என்ற பெயர் இருந்ததை இந்த சாசனம் பதிவு செய்கிறது....!
இந்த ஆதுலசாலையில் அறுவை சிகிச்சை மற்றும் நோயாளிகள் தங்கி சிகிட்சை பெற 15 படுக்கை அறை வசதிகளும் இருந்தன. இங்கு இன்று இருப்பதுபோல் பெண் செவிலியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...!
இந்த மருத்துவமனையில் இருந்த மருந்துகள் பற்றியும் அம்மருந்துகளின் பெயர்கள் மற்றும் அளவு பற்றியும் இச்சாசனம் தெளிவாக கூறுகிறது...!
1. பிராம்யம் கடும்பூரி (1 படி)
2. வாசாஹரிதகி ( 2படி)
3. கோமூத்ர ஹரிதஹி (2படி)
4. தசமூலா ஹரிதஹி (1படி)
5. கந்தீரம் (1 படி)
6. பால கோரண்ட தைலம் (1தூணி)
7. பஞ்சாக தைலம் (1தூணி)
8. ஸாஸுணாதி ஏரண்ட தைலம் (1தூணி)
இப்படி 19 வகையான மருந்துகளின் பெயர்களும் #புராணசர்பி தயார் செய்ய பசுநெய்யும் அங்கு இரவு முழுவதும் விளக்கு எரிய எண்ணெய் இருந்த செய்தியும் காணப்படுகிறது....!
இதன்மூலம் வீரராஜேந்திரனால் நடத்தப்பட்ட திரிமுக்கூடல் மருத்துவமனையைப்போலவே குந்தவை பிராட்டியார் நடத்திய விண்ணக ஆதுல சாலையும் சிறப்பாக செயல்பட்டதை அறிய முடிகிறது....!
பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த கல்வி நிலைமைகளைக் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. மடங்கள், கோவில்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன....!
மன்னர்களும், மக்களும், கிராமசபைகளும், கோவில் நிர்வாகங்களும் கல்வி நிலையங்கள் செயல்படத் தானங்களும், மானியங்களும், நன்கொடைகளும் அளித்தன....!
கற்றவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பெரிதும் மதிக்கப்பட்டனர். பொதுகல்வி, மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானவியல், வேதகல்வி ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கி இருக்க விடுதிகளும் இருந்தன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இலவசமாகத் தங்கும் இடங்களும், உணவும், உடையும், பிற தேவைகளும் வழங்கப்பட்டன....!
#எண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ரிக் வேதம், அதர்வண வேதம், பிரபாகரம், வேதாந்தம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. 300 மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துக் கிராமசபை 45 வேலி நிலத்தை இக்கல்வி நிலையத்துக்கு வழங்கியது. இந்நிலத்தில் பயிரிட்டு கிடைக்கும் வருமானம் விடுதி மாணவர் உணவுக்காகவும், உடைக்காகவும் செலவு செய்யப்பட்டன. ராஜாதிராஜன் காலத்தில் திரிபுவனி என்ற ஊரில் இருந்த கல்வி நிலையத்துக்கு 72 வேலி நிலம் வழங்கப்பட்டது. 260 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் இங்கு இருந்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வாரியங்களில் பணி செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.....!
வீரராஜேந்திரன் காலத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில் வைஷ்ணவ மாதவன் என்பவன் கல்வி நிலையம் நிறுவியதாக அவ்வூர்க் கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாம் ஆதித்த சோழன் காலத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்வி நிலையத்தில் பிரபாகரம் வேதங்கள் கற்பிக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் இருந்த சமணர்களின் கடிகையில் கதம்ப அரசனான மயூரசன்மன் வேதம் கற்றதாகத் தாளகுண்டா என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது....!
திருப்பாதிரிப்புலியூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் சமணர் கல்வி நிலையங்கள் இருந்தன. இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சோளிங்கர் என்ற ஊரில் வேதங்கள் கற்பித்த சோமாஜி என்ற அந்தணருக்கு வேதவீரமங்கலம் என்ற சிற்றூரைத் தானம் கொடுத்தான். ஞானகாண்டம், இதிகாசம் ஆகியன கற்றுக்கொடுக்கப்பட்டதாகக் காசக்குடிச் செப்புப்பட்டயம் கூறுகிறது....!
விக்கிரம சோழன் கல்வெட்டு திருவாடுதுறையில் மருத்துவசாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்ததாகக் கூறுகிறது. பசுநெய், மூலிகைகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வீரசோழன் காலத்தில் மருத்துவசாலையில் சிறப்பான மருத்துவர்களும், தாதியர்களும் இருந்ததாகத் தெரிகிறது....!
ஒரத்தநாடு முத்தாலம்மாள்புரம் கல்வெட்டு, மராத்திய மன்னர் காலத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விடுதி மாணவர்களுக்கும் தினசரி வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மருத்துவ நூல்கள், நூல் நிலையங்கள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. இலவச கல்வியே அளிக்கப்பட்டது....!
திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரியில் அஷ்டாங்க ஹிருதயம் என்ற மருத்துவ நூல் கற்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் இருந்தது. நீலகண்ட நாகம் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் அமைத்தவர். முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் மருத்துவக் கல்விச்சாலையில் 270 இளங்கலை மாணவர்களும், 70 முதுகலை மாணவர்களும் இருந்தனர். மாணவர்களில் 40 பேர் பிரம்மச்சாரிகள். நான்கு வேதங்கள், பிரபாகரம், வியாகரணம், பீமாம்சம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வாத்தி என்று ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். நித்த வினோதப் பேரரையார் என்பன போன்ற பட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.....!
மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து நாடு, நகரங்களை அழித்தான். ஆயினும், பட்டினப்பாலை என்ற நூலைப் பாடியதற்காகப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவருக்குக் கரிகால் சோழன் கொடுத்திருந்த மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. புலவர்கள் பெற்ற மதிப்பை இது காட்டுகிறது. இச்செய்தி சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.....!
திருவாச்சூர் வியாகரண மண்டபத்தில் இருந்த கல்லூரியில் பாணினி எழுதிய இலக்கண நூல் கற்பிக்கப்பட்டது. நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவர் குலோத்துங்க காவனூர் என்ற ஊரை திருவாச்சூர் கல்வி நிலையத்திற்குத் தானமாக வழங்கினான். திருபதுங்கன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் இசைக்கலை கற்பிக்கப்பட்டதாகப் பாகூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது....!








படைக்கலப் பயிற்சிக்கென கல்வி நிலையம் இருந்ததையும் அறிகிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சோமநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஆத்தூர்ச் சேனாவரையர் மாணவர்களால் தனக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் கோவிலுக்குத் தானம் வழங்கினார் என்று கூறுகிறது. இம்மன்னர் காலம் கி.பி. 1276. இந்தச் சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரையும் எழுதியுள்ளார். பாண்டியனின் சேனைக்குத் தலைவராகவும் இருந்தார். கடைக்கலப் பயிற்சியும், இலக்கியக் கல்வியும் கற்பித்துள்ளார். இவரது உரையில் தென்பாண்டி நாட்டு பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்குகள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. சேனைக்குத் தலைவர் என்பதால் சேனாவரையர் என்று பட்டம் பெற்றார். இக்கல்வெட்டு ஆத்தூரைச் சேந்தமங்கலம், சேர்ந்தபூமங்கலம், அவனிபசேரமங்கலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறது. சேனாவரையர் செல்வந்தர், நல்லவர், வல்லவர் என்று மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது.....!
வேதக்கல்வியும், வேள்வியும் பாண்டியர் காலத்தில் போற்றப்பட்டது. கொற்கை நற்கொற்றன் என்பவனுக்குப் பாகனூர்க் கூற்றம் என்னும் இடத்தில் வேதத்தில் வல்ல அந்தணர்களைக் கொண்டு வேள்வி செய்து அந்த இடத்தை வேள்விக்குடி என்று பெயரிட்டு நற்கொற்றனுக்குப் பாண்டிய மன்னன் வழங்கினான். இச்செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேடு கவிதை நடையில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் உள்ள மெய்க்கீர்த்தி என்னும் பகுதி கவிதை நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலும், புலமையிலும் சிறந்தவர்களே கல்வெட்டுகளை எழுதியுள்ளனர். மன்னர்கள் காலத்தில் கல்வி நிலை சிறப்பாக இருந்தது கல்வெட்டுகளால் உறுதி செய்யப்படு கின்றன....!
(கல்விநிலையங்கள் பற்றிய தகவலை தந்தவர் - முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர்)
(இரண்டிற்கு கல்வெட்டு ஆதாரங்களை தந்து உதவியது தொல்லியல் ஆய்வாளர் திரு #மாரிராஜன் அவர்கள்)
ஆக திராவிட ஆட்சியில் தான் நமக்கு கல்வி கிடைத்து என்றும் ஆங்கிலேயருக்கு முன்பு முறையான கல்வியும் மருத்துவமும் கிடைக்கவில்லை என்று அவரவர் #லாபிகளை திணிக்க முற்படுபவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்.....!

பள்ளிகளில் மாணவர்கள் தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் சூழல் பாதுகாப்பு உறுதிமொழி சுற்றறிக்கை - வாபஸ்

 தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தமிழர் வணக்கம் என பள்ளி மாணவர்களிடம் அரசே கூறுவதாக உள்ளது என பல தமிழர் மெய்யியல் விரோத அ...